பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638

பன்னிரு திருமுறை வரலாறு


கயிலைப் பெருமாளுகிய இறைவனே, நின்னைத் தம் முடைய ஆன்ம போதத்தாற் காண முயன்ருரது ஆராய்ச்சிக்கு நெடுந் தொலைவிலும் நின்னருளே கண்ணுகக்கொண்டு காணும் தகுதிவாய்ந்த மெய்யடியார் களுக்கு அண்மையிலும் விளங்குகின்ருய் என நின்னை உணர்ந்தோர் கூறுதலால், தன்னறிவொன்றே கருவி யாகக் கொண்டு நின்னே ஆராய்ந்து காண முற்பட்டாரொரு வர்க்கு நீ நின்ற நிலையினை அறிதல் கூடுமா? நின்னை ஆதாரமாகக்கொண்டு நின்னிடத்தினின்றும் வெளிப் பட்டுத் தோன்றிய ஏழுலகங்களும் மீண்டும் நின்பால் ஒடுங் குதலை இயல்பாகவுடையன என்னும் இவ்வுண்மையினை ஆராய்ந்து நோக்குங்கால் நினது இறைமைத் தன்மையை உள்ளவா றுணர்வார் நின்னையன்றி வேறு யாருளர்? என இறைவனை நோக்கி வினவுவதாக அமைந்தன, கருத்துக்குச் சேயையாய்க் காண் டக்கோர் கான இருத்தி திருக்கயிலே யென்ருல் - ஒருத்தர் அறிவா னுறுவார்க் கறியுமா றுண்டோ நெறிவார் சடையாய் நிலை. {கயிலே பாதி 15) நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால் மன்னிய சீர்க் காளத்தி மன்னவனே - நின்னில் வெளிப்படுவ தேழுலகும் மீண்டே யொருகால் ஒளிப்பதுவு மால்ை உரை. (கயிலைபாதி-48) எனவரும் பாடல்களாகும். இப்பாடல்களில்,

நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி யுள்ளி வந்தனன் ' எனவரும் திருமுருகாற்றுப்படையின் கருத்தும்,

காண் பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே " எனவரும் திருநாவுக்கரசர் பொருளுரையும்,

அவனருளாலே யவன் ருள் வணங்கி ' " எனவரும் திருவாதவூரடிகள் அருள்மொழியும் இடம் பெற்றிருத்தல் காணலாம்.

என்னுடைய நல்வாழ்விற்குரிய முதற்பொருளாக விளங்கும் ೧Jಲ್ವprGT! நாயினுங்கடையேனுகிய அடியேன் எந்தக்காலத்தில் எந்தப் பிறவியை யடைந்தாலும் யாண்டும் நின்னை மறவாது கண்டு ஏத்துதலே எனது பெருவிருப்பமாகும்' என இறைவனை வேண்டுவதாக அமைந்தது,