பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தக்கீர தேவ நாயஞர் }

வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலே நித்திலமே காளத்தி நீள் சுடரே - மொய்த்தொளிசேர் அக்காலத் தாசை அடிநாயேன் காணுங்கால் எ க்காலத் தெப்பிறவி யான். என்ற பாடலாகும். இது,

புழுவாய்ப் பிறக்கினும் புண் ணியாவுன்னடி யென்மனத்தே வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும் எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழியையும்

  • நின்திருவடிக்காம் பவமே யருளுகண் டாய்

எனவருந் திருவாசகத்தொடரையும் நினைவுபடுத்து வதாகும்.

திருக்காளத்தியி லெழுந்தருளிய சிவபெருமானைக் கண்டு காதலித்த தலைவியொருத்தி இறைவன் தெரு வழியே திருவுலாப்போகும் நிலையில் அப்பெருமானைத் தாங்கிச் செல்லும் எருதினை நோக்கிக் கூறுவதாக அமைந்தது,

செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனது

கையறவும் உண்மெலிவும் யான்காட்டப் - பையவே

காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள் வார்தம்

போரேறே யித்தெருவே போது. என்ற பாடலாகும். காளத்தியிறைவரது ஊர்தியாகிய போர் வலி வாய்ந்த ஆனேறே, சிவந்தசடைமுடியுடைய எம்பெருமானை யான் நேரே கண்டு எனது ,செயலற்ற தன்மையையும் உள்ளத்தின் மெலிவையும் தெளிய அறிவிக்கும் நிலையில் நீ இத்தெருவழியே பையச் செல் வாயாக என்பது இதன் பொருள். பாண்டியன் உலாவருங் கால் அவன் ஊர்ந்து வரும் ஊர்தியாகிய பெண்யானையை நோக்கி எம் பலகணிக்கு அருகே செல்வாயாக’ எனத் தலைவியொருத்தி வேண்டுவதாக அமைந்தது,

துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப்

பிடியேயான் நின்னை யிரப்பல் - கடிகமழ்தார்ச்

சேலேக வண்ண ளுெடு சேரி புகுதலுமெஞ்

சாலேகஞ் சார நட.

என்ற முத்தொள்ளாயிரச் செய்யுளாகும். இவ்விரு செய்யுட் களும் பொருளால் ஒத்துநிற்றல் அறிந்து இன்புறத் தக்கதாகும்.