பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீ தேவ நாயகுர் 84量

யமையத் திணைமாலை நூற்றைம்பது என்னும் அகத்திணை நூல் இயற்றப்பெறுவதாயிற்று. எழுபது பரிபாடல் எனக் களவியலுரையாசிரியராற் பாராட்டப்பெறும் பரிபாடலின் பாடற்ருெகையினை யுளத்துட் கொண்டே ஐந்திணையெழு பது ' என்னும் அகத்திணை நூல் பாடப்பெற்றிருத்தல் வேண்டும். தொன்று தொட்டு வழங்கிவரும் இத்தொகை நிலையைப் பின்பற்றியே திருஈங்கோய்மலையெழுபது ' என்னும் இப்பிரபந்தத்தினை நக்கீர தேவர் பாடியிருத்தல் வேண்டுமெனக் கருதுதல் பொருந்தும்.

ஈங்கோய் மலையைப் போற்றிய எழுபது வெண்பாக் களாலாகிய இந்நூல் 48-ம் பாடலின் இரண்டாவது அடி முதல் 62-ம் பாடலின் முதலடி முடியவுள்ள பகுதி சிதைந்து மறைந்தமையால் இப்பொழுது சிதையா நிலையிற் கிடைத் துள்ளவை ஐம்பத்தைந்து வெண்பாக்களேயாம். இப் பாடல்கள் யாவும் ஈங்கோய்மலையின் இயற்கை வளத்தை யும் அங்குக் கோயில்கொண்டருளிய முழுமுதற்கடவு ளாகிய சிவபெருமானது திருவருட்டிறத்தையும் சுவை நலம் பெருக இனிது சிறப்பித்துரைப்பனவாகவுள்ளன.

திருவீங்கோய்மலை குறிஞ்சிநிலமாதலின் அங்கு வாழும் மக்கள் குறவர் குறத்தியரெனக் குறிக்கப்பெறுவர். மலை நிலத்துக்கு உரியனவாகிய யானை, புலி, கேழல் (பன்றி), ஆளி, அரி (சிங்கம்), மான், மரை, மயில் முதலி யன ஈங்கோய் மலையிற் பொருந்தி வாழுமியல் பினை நக்கீர தேவர் இப்பனுவலிற் பல பாடல்களில் விரித்துக் கூறியுள் ளார். பூமியிலிதாதை (பொலிவார்ந்த மயிலை ஊர்தி யாகப் பெற்ருேளுகிய முருகனுக்குத் தந்தை) எனவும், குமரன் முதுதாதையார் ' எனவும் சிவபெருமானைப் போற்றுமுகத்தால் குறிஞ்சி நிலத்திற்குச் சிறப்புடைத் தெய்வமாகிய முருகப்பெருமானையும் ஆசிரியர் புகழ்ந்து போற்றியுள்ளார்.

மலைநிலத்தவராகிய குறவர்கள் சிங்கம், யானை, மான் முதலிய விலங்குகளை வேட்டையாடுமியல்பும், மலையுச்சியிற் கட்டப்பட்ட தேனடைகளை அழித்துத் தேனெடுத்தலும், புனத்தை உழுது தினை விதைத்தலும், குறமகளிர் யானைத் தந்தத்தை உலக்கையாகக்கொண்டு கல்லுரலிற் செந்தினை யிடித்தலும், அங்ங்ணம் இடிக்கப்பட்ட தினமாவினைக்

41