பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644

பன்னிரு திருமுறை வரலாறு


திருவிங்கோய் மலையில் வாழும் மந்தி (பெண் குரங்கு) தன் சிறிய குட்டிக்குத் தேனடையிலுள்ள தேனை వఐri தோய்த்து ஊட்டுங் காட்சியினை இந்நூலின் ஒனபதாழ பாடல் புலப்படுத்துகின்றது. இத்தோற்றம் தாயொருத்தி தன் இளங்குழந்தைக்கு உணவருத்தும் இயல்பினை நினைவுபடுத்துகின்றது. மலையின் ஒருபுறத்தே இலவமரம் ஒன்று இலையெலாம் உதிர்ந்த நிலையில் செந்நிறப் பூக்களைப் பூத்து விளங்குகின்றது. அம்மாத்திற் பூத்துக் காணப்படும் பூவினைக்கண்ட ஆண் குரங்கு, அதனை அம் மரத்திற் பற்றிய தீப்பொறி யெனக் கருதி, அருகேயுள்ள மூங்கிலின் தழையினை யொடித்துப் புடைத்து அத்தீயினை அவிக்க முயன்றதென இந்நூல் 17ம் பாடல் கூறுகின்றது. தீயை யவித்தற்குப் பசிய மூங்கிற்றழையைத் தேர்ந்து கொண்ட இயற்கையுணர்வு அக்குரங்கின்பால் அமைந்தி ருத்தலை இப்பாடல் இனிது புலப்படுத்தல் காணலாம்.

மலைச்சாசலின் ஒரு புறத்தே பளிக்குப்பாறை அமைந் துளது. மலையின் மேற்சரிவிலே வளர்ந்தோங்கிய மாமுத லிய மரங்களின் நிழல் தன் கண் படும்படியாக மலைச்சரிவின் தாழ்வில் விளங்குவது அப் பளிங்குப் பாறையாகும். பயன் மரங்கள் பழுத்து விளங்கும் பருவ காலத்தில் அவ்விடத்திற் பழகாத குரங்கொன்று அப்பாறையை யடைந்தது. அந் நிலையில் மேற் சரிவிலுள்ள மரத்திற் பழுத்த பழத்தின் சாயல் கதிரவைெளியால் அப்பளிங்குப் பாறையிலே படிந்து தோன்றியது. பளிங்குப் பாறையிற் படிந்து தோன்றிய பழத்தின் சாயலைக் கண்ட குரங்கு, அதனை உண்மையான பழமென்றே கருதிச் சுவைக் கினிய கனி யினைத் தான் கண்ட வியப்புடைச் செய்தியைத் தன் இனத் திற்குஞ் சொல்லி அழைத்து வந்து காட்டிற்று. அங்கு வந்த எல்லாக் குரங்குகளும் கனியின் நிழல் படிந்த பளிங்குப் பாறையினைத் தம் கைவிரல் நகங்கள் வருந்த விரைந்து தோண்டிப் பார்ப்பனவாயின. இச்செய்தியை,

கல்லாக் குரங்கு பளிங்கிற் கணிகாட்ட எல்லா குரங்கும் உடனிண்டி வல்லே இருந்துகிராற் கற்கிளேக்கும் ஈங்கோயே மேனி பொருந்தவராப் பூண்டான் பொருப்பு. என வரும் பாடலால் நகைச்சுவை பொருந்த நக்கீரதேவர் எடுத்துரைக்கின்ருர் எட்டாத கனியின் நிழலைக் கனி