பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 645

யென நம்பி அதனைத் தோண்டி யெடுக்க முயலும் குரங்கு களின் பேதைமையினைக் கூறுமுகத்தால் இவ்வுலகில் இன்பமில்லாத போலித் தோற்றங்களை உண்மையென நம்பி ஒரு நிலைப்படாது அலமந்து திரியும் பேதை மாந்த ரது இழித கவினை ஆசிரியர் குறிப்பால் அறிவுறுத்துந் திறம் பெரிதும் வியக்கத்தக்கதாகும்.

மென்மையான இதழ்களையுடைய செங்காந்தள் மலரின் மேல் கருவண்டு மொய்த்திருந்த தோற்றத்தைக் கண்ட முதிய பெண்குரங்கொன்று, செங்காந்தள் மலரைத் தீயென மருண்டு அதன்கண் படிந்த வண்டினை அத்தீயில் அகப்பட்டு வருந்துவதாக எண்ணி அவ்வண்டின் பால் வைத்த இரக்கத்தால் அதனைத் தீயிலிருந்து காப்பாற்ற வேண்டுமெனத் துணிந்து அதன் அருகே நெருங்கிச் சென்றதாயினும், அத்தீ தன்னைச் சுடுமென்ற அச்சத் தினுலே இன்னது செய்வதென்றறியாது உளந்துணுக் குற்று எழுந்து எழுந்து தன் கையை நெறித்துக் கொள் கின்றது. பிறிதின் நோய் தன்னுேய் போற் போற்றும் இக்குரங்கின் இரக்க வுணர்வினை,

வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப வொண் தீ முழுகியதென் றஞ்சி முதுமந்தி - பழகி எழுந்தெழுந்து கைநெறிக்கும் ஈங்கோயே திங்கட் கொழுந் தணிந்த செஞ்சடையான் குன்று. எனவரும் பாடலால் ஆசிரியர் அறிவுறுத்திய முறை உள் ளத்திற்குப் பேருவகை யளிப்பதாகும். பிறர் துயர்க்கிரங் கும் இரக்கவுணர்வு உயிர்க்குணமாயினும் அப்பண்பினை முடிவு போகச் செயற்படுத்தும் நல்லறிவும் உள்ளத்துறுதி யும் உயிர்களுக்கு இயல்பாக அமைந்தன வல்ல என்பதும் அச்சந் தீர்த்து நல்லறிவு வழங்கி எல்லாவுயிர்களையும் உய்விக்க வல்ல பேரருளும் வரம்பிலாற்றலு முடையோன், தன் குற்றத்தால் தேய்ந்து சிறுகும் மதியினை நிறைமதியாக வளர்வித்த செஞ்சடையாளுகிய சிவபெருமானே யென்ப தும் ஆகிய உண்மைகளைக் குரங்கின் செயலில் வைத்து இந்நூலாசிரியர் குறிப்பினுணரவைத்த நுட்பம் உய்த் துணர வல்லார்க்குப் பெரு மகிழ்ச்சி தருவதாகும்.

"குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட்

குலைமேற்பாய அழலெரியின் மூழ்கினவால் அந்தோ அளியவென்

தயல்வாழ்மந்தி