பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 647

செயலைக் கண்டுகொண்ட யானையொன்று, அப்புனத்தில் உலவுங்கால் அவர்கள் பறித்த குழிகளில் வீழ்ந்தகப்படா மல் தன்னைக் காத்துக்கொள்ளக் கருதித் தனது நீண்ட கையிலே தடியொன்றைப் பற்றிக்கொண்டு தரையில் ஊன்றிச் சென்ற திறத்தை இந்நூல் 36- ஆம் பாடலில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். தீங்குவரு முன்னர்க் காக்கும் நல்லறிவினை யானையானது தன் வாழ்க்கை யனுபவத்தாற் பெற்றமுறை அறிஞர்களாற் பாடப்பெறுஞ் சிறப்புடையதே யாகும்.

மூங்கிற் காடுகளினிடையே யமைந்த தினைப்புன மொன்றில் தன் பிடியொடு புகுந்துண்ணத் தொடங்கிய களிற்றின்மேல் புனங்காக்கும் வேடன் அம்பினைச் செலுத் துகின்ருன். அத் துன்ப நிலையிலிருந்து தப் பியோடக் கருதிய ஆண்யானை, முதலில் தனது அன்பிற்குரிய பெண் யானையைப் பாதுகாத்தலே தன் கடமையென வுணர்ந்து அங்கு வளர்ந்துள்ள நீண்ட மூங்கில வளைத்து அதன் தோகையால் பெண்யானையை அவ்விடத்தினின்றும் ஒட்டிப் பாதுகாக்குஞ்செயலே இந்நூல் 89-ஆம் பாடல் குறிப்பிடுகின்றது. இங்ங்ணம் களிற்றின்பால் அமைந்த இவ்வாண்மைச்செயல் ஆண்கடனிறுக்கும் பெருவீரர்கள் பால் அமையவேண்டிய நற்பண்பாகும். " உரிமை முன் போக்கியல்லால் ஒளியுடை மன்னர் போகார் " எனச் சச்சந்தன் தன் மனைவி விசயையை நோக்கிக் கூறும் அறிவுரை இவண் ஒப்புநோக்கு தற்குரியதாகும்.

மக் ச்சாரலின் ஒருபக்கத்தே கரிய மேகத்தைக் கண்டு களிப்பு:மீதுார்ந்த மயிலொன்று, தன் கோலச்சிறகை விரித் தாடுகின்றது. அவ்விடத்தே செங்காந்தள் மலர்கள் கைகளைப்போன்று பூத்துக் காணப்படுகின்றன. அம்மலர் களின்மேல் பொன்போன்ற இதழ்கள் உதிரும் நிலையில் கொன்றைமரம் ஒன்று நிறையப்பூத்து மணங்கமழ் கின்றது. தோகைவிரித்து ஆடும் மயில் ஆடல் மகளாக வும் பொன்போன்ற பூக்களைச் சொரியுங் கொன்றைமரம் அக்கூத்தினைக்கண்டு பரிசில் தருஞ் செல்வராகவும் அம் மரத்தினின்று உதிரும் கொன்றை மலர்களைத்தாங்கி விரிந்த செங்காந்தள் மலர், செல்வர்.தரும் பொன் களை யேற்கும் கையாகவும் தோன்றும் அழகிய காட்சியினை,