பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் శిక్షీ$

புறக்காட்சியைப் பொருளாகக் கொண்டு, தன் ஆருயிர் நாயகனது பிரிவாற்ருது நளியிரும்பொய்கையையும் தீயை யும் ஒன்ருகக் கருதித் தீப்பாயுங் கற்புடை மகளது உளங் கலங்கா நிலைமையாகிய கற்பென்னுந் திண்மையினைத் தெளிவித்த புலமைத் திறம் வியந்து பாராட்டுதற்குரிய தாகும்,

மலையில் வாழுங் குறமகளிர் தம் தாய்மை அன்பினுல் அஃறினையுயிர்களிடத்துக் கொண்ட இரக்கவுணர்வும், அம் மகளிர்பால் அவ்வுயிர்கள் அன்பினுல் அடங்கியொழுகுந் திறமும் ஈங்கோய்மலையெழுவதில் நன்கு விளக்கப் பெற். றுள்ளன. யானையின் இளங்கன்று தன்னினத்திலிருந்தும் பிரிந்து வழிதவறி வந்து விட்டது. தன் தாயைப் பிரிந்தறி யாத அக்கன் றினைக் கண்டு உளமுருகிய குறவர்மகளிர், சந்தன மரத்தின் இலைகளைத் தேனில் தோய்த்து அக் கன்றுக்கு ஊட்டுகின் ருர்கள். இச்செய்தி இந்நூல் 2-ம் பாடலிற் கூறப்பட்டுளது.

குறிச்சியில் வாழும் குறமகளிர் சந்தன மரத்தின் இலை யிலே தினமாவைத் தேனெடு கலந்து அங்குள்ள மந்திக் குங்கொடுத்துத் தாமும் சுற்றத்தொடு கூடியிருந்து உண் கிருர்கள். அவர்களிடம் பங்கு வாங்கிக்கொண்ட பெண் குரங்கு தினைமாவினைத் தானே தனித்துண்ணுமல் அச் சிற் நூரில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறு மகளிரின் வாயிலே ஊட்டித் தானும் உடனிருந்து உண்ணத் தொடங்குகிறது. இவ்வரிய நிகழ்ச்சியை விளக்குவது,

சந்தின் இலையதனுட் உண்பிண்டி தேன்கலந்து கொந்தியினி துண்ணக் குறமகளிர்-மந்தி இளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின் வளமகளிர் பாகன் மலே, என்ற செய்யுளாகும், மலைவாணர் மகளிரொடு பழகிய மந்தியும் பகுத் துண்டு பல்லுயிரோம்பும் நல்லறத்திற் சிறப்புற்றுத் திகழ்தலை புணர்த்து முகத்தான் ஈங்கோய் மலையில் வாழும் மகளிரது மனைத்தக்க மாண்பினை உய்த்துணர வைத்தமை நினைந்து மகிழ்தற்பாலதாகும்.

மலைவாணராகிய வேடுவர்கள் விலங்குகளை இரக்க மின்றிக் கொல்லுங் கொடுந்தொழிலை மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாமை உடையராயினும், தமது