பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 653

முறையாக அமர்ந்து இறைவனது திருமேனியைத் தீண்டி வழிபடுங் கருத்தினுல் ஆடிப்பாடி ஆரவாரிக்கும் இயல்பினை 64-ஆம் பாடல் அறிவுறுத்துவதாகும்.

மணமாகாத குறமகளிர், காதலன் களவில் வந்து செல்வதனலுண் டாகிய பழிச்சொல்லை நீக்கி அவனை என்றும் பிரியாது கலந்து மகிழும் நிலையில் தமது திருமணத் தினை விரைவில் நிறைவேற்றியருளுதல் வேண்டுமென ஈங்கோய் மலை யிறைவர் திருவடிகளிற் செந்நிறத்த நறு மலர்களைச் சொரிந்து வழிபாடு செய்கின்ருர்கள். இங்ங்னம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குத் துணைபுரியும் மகளிரது வழிபாட்டு முறையினை,

கொவ் வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர் கவ்வைக் கடிபிடிககுங் கா தன்மையாற்-செவ்வை யெறித்த மலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர் குறித்தவரந் தான் கொடுப்பான் குன்று. எனவரும் பாடலால் நக்கீரதேவர் புலப்படுத்துகின் ருர்,

  • யாம் எம் காதலரைக் கனவிலே மணந்தது பொய்யாகாமல்,

நனவின் கண் திருமணத்தினை நிறைவேற்றியருளுக" என மகளிர் முருகப்பெருமானைப் போற்றி வரங்கொண்ட செய்தி எட்டாம் பரிபாடலிற் குறிக்கப்பெற்றமை இங்கு ஒப்புதோக்கத்தகுவதாகும்.

திருவலஞ்சுழி மும்மணிக் கோவை

திருவலஞ்சுழியிற் கோயில்கொண்டருளிய சிவபெரு மானைப் போற்றிப் பரவுங் கருத்துடன் நக்கீரதேவர் பாடிய பிரபந்தம் திருவலஞ்சுழி மும்மணிக் கோவையாகும். திரு வலஞ்சுழியென்பது, சோழநாட்டிற் காவிரியாற்றின் தென் கரையில் அமைந்ததோர் ஊர். இவ்வூர் காவிரியாறு வல மாகச் சூழ்ந்து செல்லும் இடத்தில் அமைந்திருத்தல்பற்றி வலஞ்சுழியென்ற பெயரால் வழங்கப்பெறுவதாயிற்று. 'மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி யெனத் திருஞான சம்பந்தர் தேவாரத்தும், காவிரிமடந்தை வார்புனல் உடுத்த மணி நீர் வலஞ்சுழி யென மும்மணிக் கோவையி லும் இவ்வூரின் இயற்கைவளம் கூறப்படுதல் கொண் டு வலஞ்சுழி யென்னும் இவ்வூரின் பெயர்க்காரணத்தை நன்குணரலாம்.