பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 镜盘

பெருமானல் ஆட்கொள்ளப் பெற்ற திருவாதவூரடிகள் நாவிலே அவர்பெற்ற உபதேசத்தின் பயனுக ஞானவாணி யாகிய கலைமகள் வந்தமர்ந்தாள். அந்நிலையில் அடிகள் பழுதிலாத சொல்மலர்களாகிய மணிகளை அன்பாகிய வடத்தில் நிரல்படக் கோத்துக் குருமூர்த்தியாகிய பெருமா னுக்கு மாலையாக அணிந்து போற்றினரெனவும், அதுகண்டு மகிழ்ந்த சிவபெருமான் வாதவூசர்க்கு மாணிக்க வாசகன் என்ற சிறப்புப் பெயரிட் டழைத்தாரெனவும் பரஞ்சோதி முனிவர் கூறுவர். திருவாதவூரடிகள் வரலாறு கூறும் நூல்களுள் மிகவும் தொன் மை வாய்ந்த திருவாலவாயுடை யார் திருவிளையாடற் புராணத்தில், திருப்பெருந்துறையிற் குருவாக எழுந்தருளிய இறைவர் வாதவூரரை நோக்கி மாணிக்கவாசக என அழைத்தருளியதாகக் கூறப் பெற்றுளது. திருவாதவூரடிகள் பழைய கல்வெட்டுக்களில் திருவாதவூரர், திருவாதவூராளி நாயனுர் எனவே குறிக்கப் பெறுகின்ருர், இறைவனது பொருள்சேர்புகழை விரித் துரைக்கும் திருப்பாடல்களே மணிவார்த்தை' என்ற பெயரால் அடிகள் திருவாசகத்திற் குறிப்பிட்டுள்ளார்.

சிந்தனை நின் றனக்காக்கி நாயினேன் றன்

கண்ணினே தின் திருப்பாதப் போதுக்காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்

மணிவார்த்தைக் காக்கி எனவும,

பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த மாசின் மணியின் மணிவார்த்தை

என வும் வரும் வாசகத் தொடர்களால் இக்குறிப்பு இனிது புலனுதல் காணலாம். அடிகள் குறித்த மணிவார்த்தை என்றதொடர்க்கு மாணிக்க மணிபோலும் வாசகம் எனப் பொருள்கொண்ட உமாபதி சிவாசாரிய சுவாமிகள், தாம் இயற்றிய கோயிற் புராணத்தில்,

பேசுபுகழ் வாதவூர்ப் பிறந்துபெருந்துறைக்கடலுண்

டாசி லெழி றடித்தய வஞ்செழுத்தா லதிர்த்தெழுந்து தேசமலி தரப்பொதுவார் சிவபோக மிக விளைவான் வாசகமா மாணிக்க மழைபொழிமாமுகில் போற்றி.

எனத் திருவாத ஆரடிகளை இறைஞ்சிப் போற்றியுள்ளார். இதன்கண் வாசகமா மாணிக்க மழைபொழி மாமுகில் ’ எனத் திருவாதவூரடிகளைப் போற்றுமுகத்தால் அவர்