பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

5

4

பன்னிரு திருமுறை வரலாறு

ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆகிய மும்மணிகளால் அந்தாதித் தொடையமையத் தொடுக்கப் பெற்றமையால் இது மும்மணிக் கோவை யென்னும் பெயர்த்தாயிற்று. மும்மணிக்கோவையாகிய இப் பிரபந்தம் முப்பது செய்யுட்களால் இயன்றிருத்தல் வேண்டுமென்பது வச்சணந்திமாலை, சிதம்பரப் பாட்டியல் முதலிய பிற்காலப் பாட்டியல் நூலோர் கொண்ட வரையறையாகும். நக்கீர தேவர் பாடிய இத்திருவலஞ்சுழி மும்மணிக்கோவை வணங்குதும் வாழிநெஞ்சே யெனத்தொடங்கி, வலஞ் சுழியான அண்ணுமலைமேல், வம்பார் நறுங்கொன்றைத் தாருடையான வணங்குதுமே ' என முடிந்து, அந்தம் ஆதியாகப் பதினைந்து பாடல்களால் நிறைவு பெற்றுளது. இதனை நோக்குங்கால், மும்மணிக்கோவை யென்னும் பிரபந்தம் முப்பது பாடல்களால் இயற்றப்பெறுதல் வேண்டு மென்னும் வரையறை இந்நூலாசிரியர் காலத்தில் நன்கு நிலைபெறவில்லை யென்பது புலனும்.

திருவலஞ்சுழியில் எழுந்தருளிய சிவபெருமானைக் கண்டு அவ்விறைவனது பேரழகில் ஈடுபட்டுக் காதல் கொண்டு வருந்தும் தலைவியின் அன்பின் திறத்தைப் புலப் படுத்தும் பாடல்களும், உலகியல் வாழ்வில் ஒருவனும் ஒருத்தியும் அன்பில்ை இன்புற்று வாழும் அகத்திணை யொழுகலாறுகளைப் புலப்படுத்தும் நிலையில் திருவலஞ்சுழி யிறைவனைப் பாட்டுடைத் தலைவனுக வைத்துப் போற்றும் அகத்துறைப்பாடல்களும் இம் மும்மணிக் கோவையில் இடம் பெற்றுள்ளன. ஒடேந்து செல்வகை எழுந்தருளி வந்த இறைவனது பேரழகில் ஈடுபட்ட பெண்ணுெருத்தி, அப்பெருமான் விரைந்து மறைந்தாகை, அவனைக் காணப் பெருது கைவளைகள் கழல வருத்த முறுகின்ருள். அங்ங்ணம் வருத்தமுறுபவள் தனது உடல்மெலிவிற்குரிய காரணத் தைத் தன் தோழிக்குரைப்பதாக அமைந்தது.

பொருட்டக் கீர் சில்பலிக்கென் றில் புகுந்தி ரேனும் மருட்டக்கீர் யாதும்மூர் என்றேன்-மருட்டக்க மாமறையம் என்ருர் வலஞ்சுழி நம் வாழ்வென்றர் தாம்மறைந்தார் காணேன் கைச் சங்கு

எனவரும் பாடலாகும். நன்கு மதிக்கத்தக்க பெரியீர், நீவிர் சிலவாகிய பொருளை இரந்துபெறுதற்பொருட்டுப் பிச்சைக் கோலத்துடன் எமது இல்லினுள் நுழைந்தி