பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 6胺密

ரெனினும், எல்லாச் செல்வங்களுக்குங் காரணமாகிய பெருந்திருவுடன் வியக்கத்தக்க தோற்றமுடையீராய்த் திகழ்கின்றீர். உம்முடைய ஊர்யாது? என்று வின வினேன். அது கேட்ட அவர் வியக்கத்தக்க மாமறையம் (பெருமைதங்கிய மறைக்காட்டிடத்தோம், பெரிய வேதங் களின் இடத்தோம் என்ருர். நாம் விரும்பி வாழும்பதி வலஞ்சுழி யென்றுகூறி விரைந்து மறைந்தார். யான் அணிந்துள்ள கைவளையல்களைக் காணேனுயினேன் ' என்பது இதன் பொருளாகும்.

தான் ஏறி நடத்தும் ஊர்தியாகிய இடத்தைக் கைகளால் தொழுதேனல்லேன். தன் சடைமேல் விளங் கும் தேனிறைந்த கொன்றைமலரைக் குறித்து எதுவும் பேசினேனல் லேன். இங்ஙனமாகவும் வலஞ் சுழி யிறைவன் என் கை வளையல்களைக் கவர்ந்தது எது கருதி எனத் தலைமகள் நினைந்து கவன்று கூறுவதாக அமைந்தது,

தானேறும் ஆனேறு கைதொ.ழேன் தன்சடைமேல் தேனேறு கொன்றைத் திறம் பேசேன் - வானேறு மையாருஞ் சோலை வலஞ்சுழியான் என்கொல்என் கையார் வளே கவர்ந்த வாறு.

என்ற பாடலாகும்.

பரத்தையிற் பிரிந்த தலைவன், தலைவியது ஊடலைத் தணிவிக்கவேண்டிப் பாணனைத் தூதாக அனுப்புகின் ருன். விறலியொடுகூடி வாயிலாக வந்த பாணனை நோக்கித் தலைவி கூறுவதாக அமைந்தது,

நெறி தரு குழலி விறலியொடு புணர்ந்த செறிதரு தமிழ்நூ ற் சீறியாழ்ப் பாண பொய்கை யூரன் புதுமணம் புணர்தர மூவோம் மூன்று பயன் பெற் றனமே, நீயவன் புனை தார் மாலை பொருந்தப் பாடி இல்லதும் உள்ளதும் சொல்லிக் கல்லல் வாசகம் வழாமற் பேச வன்மையில் வானது மகளிர் வான் பொருள் பெற்றனை, அவரேல் எங்கையர் கொங்கைக் குங்குமம் தழி இ விழையா இன்பம் பெற்றனர், யானேல் அானமர்ந் துறையு மணிநீர் வலஞ்சுழிச் சுரும் பிவர் நறவயிற் சூழ்ந்தெழு தரும்பிற் lநீ ரன்ன வாய்நீர் சோ ருஞ் சிலம்புகுரற் சிறு பறை பூண்ட அலம்புகுரற் கிண்கிணிக் களிறுபெற் றனனே.