பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656

பன்னிரு திருமுறை வரலாறு


என வருஞ் செய்யுளாகும். விறல்பட ஆடவல்ல விறலி யொடுகூடிய பொருள்செறிந்த இசைத்தமிழ்த் திறத்திற் பயின்று சீறியாழ் என்னும் இசைக் கருவியை வாசிக்கவல்ல பாணனே பொய்கை சூழ்ந்த ஊரளுகிய என் கணவன் பரத்தையரைப் புதுமணம் புணர்ந்தமையால் நீயும் அவனும் யானும் ஆகிய நாம் மூவரும் மூவகைப் பயன்களைப் பெற்ருேம். இசைத் திறத்திற் பயின்ற பாணனுகிய நீயோ, அவன் அணிந்த மனமாலையை இசைபொருந்தப் பாடிப் பொய்யும் மெய்யுமாகிய இருவகை நிகழ்ச்சிகளையும் கூட்டித் திறம்படப் பேசும் சொல்வன்மையுடையை யாதலின் வானரமகளிர் போல்வாராகிய அப்பரத்தையரைப் போன்று அவனிடத்திருந்து மிகுதியான பொருளேப் பரிசிலாகப் பெற்றன. என் கணவராகிய அவரோ பரத்தையரைத் தழுவித் தாம் விரும்பிய இன்பத்தைப் பெற்றனர். அவரைப் பிரிந்துறையும் யானே சிவபெருமான் வீற்றிருந் தருளும் புனல் சூழ்ந்த திருவலஞ் சுழியில் வண்டுகள் ஆரவாரிக்க மரப்பொதும் பரிடைக் கட்டப்பட்ட தேனடை யிலுள்ள நறுந் தேனையொத்து அண்ணிக்கும் வாய் நீரையும் ஒலிக்கும் சிறுபறையினையும் ஆரவாரிக்கும் கிண் கிணியையும் உடைய புதல்வனுகிய மழவிளங்களிற்றினைப் பெற்று மகிழ்கின்றேன். என்பது இதன் பொருள். * பரத்தையரது முயக்கினையே பெறுபயணுகக் கொண்டவர் என் கணவர். அவர் விரும்பிய பழிவழியினையே நன்றெனக் கூறி அவராற்பெறும் பரிசிற் பொருளைப் பெறுபயணுகக் கொண்டுவாழும் இயல்புடையாய் பாணளுகிய நீ. அவரது புறத்தொழுக்கிளுல் வருந்தி அவ்வருத்தத்தை மறக்கும் நிலையில் செயிர் தீர் காட்சிப் புதல்வனைப் பேணி வளர்த் தலையே வாழ்க்கைப் பேருகக் கருதி வாழ்பவள் யான். இந்நிலையில் தலைவர் நின்னை இங்கு வாயிலாக அனுப்புதற் குரிய இன்றியமையாமை எதுவும் இல்லையே எனத் தலைவி வாயிலாக வந்த பாணனைக் குறிப்பால் மறுத்துரைத்ததிறம் பெரிதுஞ் சுவை தருவதாம்.

திருவெழு கூற்றிருக்கை

எழு கூற்றிருக்கை யென்பது மிறைக்கவி (சித்திரகவி) வகைகளுள் ஒன்று. ஒன்றென்னும் எண்ணினை முதலாகக் கொண்டு தொடங்கிப் படிப்படியே ஒவ்வோரெண்ணுகக்