பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 密需膏

கூட்டியும் அம்முறையே ஒன்ருென்ருக ஒன்று முடியக் குறைத்தும் இங்ங்னம் ஒன்றுமுதல் ஏழிருக எண்ணும் நிலை யில் அமைந்த செய்யுள் எழுகூற்றிருக்கை யெனப்படும். “ எழு கூற் றிருக்கையாவது ஏழறையாக்கி முறையானே குறுமக்கள் முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும் பெற்றியான் வழுவாமை ஒன்று முதலாக ஏழிறுதியாக முறையானே பாடுவது " என்பர் யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர். இங்ங்னம் எண்ணப்படும் எண்களை இரத பந்தத்தில் அடக்குமிடத்து மையத்திற் பத்தி யிரண்டு பத்தியாய்க் கீறி வலத்திலும் இடத்திலும் முறையே எண்ணிச் செல்லும்படி மையத்திலொன்று பதினுன்காகவும் அதன் அயல் இரு பத்தியில் இரண்டும் பன்னிரண்டாகவும் ஒழிந்த மூன்று முதலிய வெண்ணும் பத்திதொறும் இரண்டு குறைந்து ஏழென்னுந் தொகை பொருந்தி முதலிலே நின்ற ஒன்றில் வந்து முடியுமெனவும் இங்ங்னம் செய்யுளகத்து எடுத்தாளப்படும் எண்ணுப் பெயர்கள் இரட்டுற மொழித லாகவும் ஈறு திரிந்தும் வருமெனவுங் கூறுவர் மாறனலங் கார ஆசிரியர்.

எழு கூற்றிருக்கை யென்னுஞ் சித்திரக வியின் மூல இலக்கியமாகத் திகழ்வது, திருஞானசம்பந்தர் அருளிய திருவெழு கூற்றிருக்கையாகும். அதனை யடியொற்றியதே பதினுெராந் திருமுறையிலுள்ள இ த் தி ரு .ெ வ ழு கூற்றிருக்கை. இவ்விரண்டின் சொற்பொருள் நலங்களை உய்த்துணருங்கால் திருஞானசம்பந்தர் பாடிய திருவெழு கூற்றிருக்கையினைப் பின்பற்றியே நக்கீர தேவர் இத்திரு வெழு கூற்றிருக்கையினைப் பாடியுள்ளாரென்பது நன்கு புலம்ை. நக்கீர தேவர் பாடிய இச்செய்யுளை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் மேற்கோளாக எடுத்துக் காட்டி யுள்ளார். பதினுெராந்திரு முறை அச்சுப் புத்தகத்திற் காணப்படும் பாடத்திற் சிறிது வேறுபட அமைந்தது யாப் பருங்கல விருத்தியிற் காணப்படும் பாடமாகும். ஒருடம் பிருவரா யொன்றி யொன்றுபுரிந் தீரிதழ்க் கொன்றை சூடினை, மூவிலைச் சூலமேந்தினை, சுடருஞ் சென் னி மிசை இருகோட் டொருமதி யெழில் பெற மிலைச்சினை ஒருகனை யிருதோள் செவியுற வாங்கி மூவெயில் நாற்றிசை முனை யாண் செகுத்தனை யாற்ற முந்நெறி பயந்தன தேற்றி

42