பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662

பன்னிரு திருமுறை வரலாறு


இணையடிக் கீழ் அடங்கி நின்று நின்னைப்பாவிப்போற்றுவ தாகிய இவ்வரத்தினையே மேன்மேலும் நின் பால் வேண்டு கின்றேன்' என்பார்,

சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே கூட லாலவாய்க் குழக ைவ தறியா தருந் தமிழ் பழிச்சினன் அடியேன் ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ் நின்று வேண்டுமது வினிவேண்டுவன் விரைந்தே.

எனப் பரவிப் போற்றியுள்ளார்.

இறைவனை முன்னிலைப் படுத்துப் பரவிப்போற்றும் இத்தேவபாணியில் வரும் நீலகண்டன், நெற்றியோர் கண்ணன், பால் வெண்ணிற்றன், நூலணிமார்பன் முதலிய அன்னிற்று ஆண்பாற் படர்க்கைப்பெயர்கள் அன் விகுதியின்மேல் ஐகார விகுதி பெற்று முன்னிலை யொருமைப் பெயர்களாய்த் திரிந்துள்ளன. இங்ங்னம் படர்க்கையிடத்திற்குரிய ஆ ண் பா ற் .ெ ச ல் 澄 விகுதிபெற்று மு ன் னி லை ச் சொல்லாய் மாறும் இச் சொல்வழக்கு சங்கத்தொகை நூல்களிற் காணப் படாத புதுமையுடையதாகும். * நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் ’ என்ற திருநாவுக்கரசர் வாய்மொழியை யுளத்துட் கொண்டு, நேசனை நினைப்பவர் நெஞ்சத்துள்ளன யென்றும், தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் அன்பினு லழைத்த திறத்தினை நினைந்து தாயும் நீயே தந்தையும் நீயே யென்றும், சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க எனத் திருவாதவூரடிகள் அருளிய மெய்ம் மொழியை எண்ணிச் சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே யென்றும் இத்தேவபாணியில் நக்கீரதேவர் போற்றி யுள்ளமை காணலாம். இத் தேவபாணியை யடுத்து,

விரைந்தேன் மற் றெம் பெருமான் வேண்டியது வேண்டா திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென் மேற் சிற்றத்தைத் தீர்த்தருளு தேவாதி தேவனே ஆற்றவுநீ செய்யும் அருள். என வரும் வெண்பா அமைந்துள்ளது. என்னிலும் இனிய எம்பெருமாளுகிய நீ என் பொருட்டு விரும்பி யறிவுறுத்திய நல்வழியை யான் விரும்பாது அதற்கு மாருண தீயவழியில்