பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664

பன்னிரு திருமுறை வரலாறு


காரணமாவன உயிர்கள் செய்த நன்றுந் தீதுமாகிய இரு வினைகளேயாம். இருவினைப் பயன்களை உயிர்களுக்கு அருத்துதல் முதல்வனது அருளானையாதலின் அப் பயன்களை நுகர்விக்கும் நிலையில் ஒரு திறத்தாரை விரும்புத லும் மறுருெருதிறத்த ரை வெறுத்தலும் ஆகிய மனக் கோட்டம் இறைவனுக்கு உண் டாதலில்லை. எவவுயிர்க்கும் இன்பந்தருதலாற் சங்கரன் என்பது இறைவனுக்குரிய காரணப் பெயராகும். எனவே அவ்விறைவனுற் செய்யப் படும் ஒறுத்தற்ருெழிலும் அருளின் வழிப்பட்டதேயாம். இறைவனது திருவருளாணை வழி அடங்கி யொழுகுவோர் செய்வன வெல்லாம் அறத்தின்பாற்பட்டன. அவ்வருள் ஆணை வழி அடங்கி நில்லாதோர் தன்முனைப்பினுற் செய்யுத் தொழில்கள் தீமையுடையன என்பது திருநெறித் தமிழ் வல்ல சான் ருேர்களது கொள்கையாகும். இவ்வுண்மையை உளத்துட்கொண்டு நக்கீரதேவர் பாடிய கோபப் பிரசாதம் என்னும் இத்திருப்பாடலின் பொருளை ஆராய்ந்துணர்தல் அறிஞர் கடனுகும்.

தவறு பெரிதுடைத்தே தவறுபெரிதுடைத்தே என இப்பாடலைத் தொடங்கிய நக்கீரதேவர், மூர்க்க மாக்களை இன்னேகொண்டேகாக்கூற்றம், தவறு பெரிதுடைத்தே என முடிக்கின்ருர், இறைவன் அவ்வக் காலந்தோறும் செய்தருளிய அளியுந் தெறலுமாகிய செயல்கள் இப் பாடலின் முதற்கண் முறைப்படச் சொல்லப்பெற்றுள்ளன.

இறைவன் செய்தருளும் அருட்செயல்களை நான்முகன் இந்திரன் முதலிய தேவர்கள் ஓரளவு எடுத்துரைத்தற்கு ஏற்ற அறிவுடை யாரெனினும் பெருங்கடல் நீரைக் கையில்ை இறைக்க முயன்ற குருடனைப் போன்று அதனை முற்றமுடித் தற்கேற்ற அறிவாற்றல் பெருதுள்ளார்கள். ஐம்பொறி வழியாகச் செல்லும் ஐந்தவாவினையும் அடக்கும் அறிவாற்றல் பெருத மாந்தர் தம்மையொத்துப் புலனடக்கம் பெருத இந்திரனைப் பரம் பொருள் எனக்கூறுவர். இன்ன தன்மையன் என அறியவொண்ணு தபடி வாக்கும் மனமுங் கடந்து விளங்கும் முழுமுதற் பொருள் ஆகிய சிவபெரு மானைச் சரணெ ன ச் சாராது ஏனைப் பிறந்திறந்து ழலுந் தேவர்களைக் கடவுளாக நினைப் போர் முயலைத்தொ, ராது இழிந்த காக்கையைப் பிடிக்கச் செல்லும் வேடர்களாகிய மூடர்களைப் போன்றும் குளிர் நீங்கச் சுடர்வழங்க வல்ல