பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயனுச் 665

விளக்கிருக்கவும் அதனைச்சார்ந்து பயன்பெருது மின்மினிப் பூச்சியைத் தீயென மயங்கிக் குளிர் காய நினைக்கும் பேதை யரைப் போன்றும் காலத்தை வீணே கழிக்கின் ருச்கள். தன்னை வழிபடுபவரது இடர்களைக் களைய மடிதற்றுத் தான் முந்து றும் முழுமுதற் பொருளாகிய இறைவனை எண்ணுது இடர் நீக்கும் ஆற்றலற்ற ஏனை க் கொச்சைத் தேவரைக் கடவுளென் றெண் ணிப் பித்தேறியவர்களாய் ஆரிய மொழியில் தாம் பயின்று பெற்ற புத்தகப்படிப்பையே பேய் போன்று விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு இன்னேர் திறம்பட வாதஞ்செய்வர். தாம் விரும்பியவற்றைப் பேசி வடிவால் மக் ஆளே போன்று திரியும் இவர்கள் மி ,வும் அறியாமையுடையர். இவ்வுலகில் ஒருவன் மற்ருெருவனைப் பார்த்து உனது தலையிலுள்ள மூளைப்பகுதி மீனின் தலையை விட எட்டுப்பலம் மிகுதியுடையது எனக் கூறினல் அது சரிதான எனத் தெரிந்துகொள்ள விரும்பி அவனுற் சுட்டப் பட்டவனது தலையை யறுத்துச் சரிபார்த் தற்கு யாரும் உடன்பட மாட்டார்கள். இவ்வாறு மக்களது அது வ உணர்வுக்கு ஒவ்வாதவகையிற் புனைந்துரை வழக்கிற் பேசப்படும் சிறுதேவர்கள் முழு முதற் கடவுளென்பது உண்மையாளுல் அத்தேவர்கள் தமது ஆற்றலால் இன்னுரை அழித்தார்களெனவும் இன்னுரைப் பாது காத்தார்களெனவும் அன்னுேர் தம்மை வழிபட்டாரை வாழ்வித்தல் வேண்டி மேற்கொண்ட ஒறுத்தற் செயல்களை யும் அளித்தற்செயல்களையும் உலக மக்களறியத் தெளிவாக எடுத்துரைத் தல் வேண்டும். இங்ங்னம் இவர்கள் தம் கொள்கையினை ஏதுவும் எடுத்துக்காட்டும் தந்துரைப்பது இல்லை. எனினும் உரனில்லர்த ஆடுகளைப் போல அச்சத்தாற் கூடிக்கதறியும் ஏனைவிலங்குகளைப் போல ஐம்புல வேட்கையிற் சிக்குண்டு வருந்தியும் இவ்வுலக வாழ்வில் தசம் பெற்ற சிற்றறிவையே பேரறி வெனக் கொண்டு மயங்கியும் உயிர்க்குயிராகிய இறைவனை இன்ன தன்மையன் என அவனருளால் உணர்ந்துகொள்ள மாட்டாத மூர்ச்கர்களாக உள்ளார்கள். இத்தகைய தீயோர்களால் இவ்வுலகிலுளவாந் தொல்லைகளுக்கு எல்லையேயில்லை ஆதலின் இத்தகையோரது உயிரை இப் பொழுதே கவர்ந்து செல்லுதல் கூற்றுவனது கடமை யாகும், இக்கடமையை உரிய காலத்தில் செய்யாத கூற்றம்