பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666

பன்னிரு திருமுறை வரலாறு


பெரிதும் குற்றமுடையதே ' என நக்கீரதேவர் மனம் வருந்திக் கூறுவதாக அமைந்தது இப்பாட்டு.

முயல்விட்டுக் காக்கைப் பின்போதல்’ என்பதொரு பழமொழி. வேட்டைக்குச் செல்வோன் தன் ல்ை தொடர்ந்து பிடித்தற்குரியதும் நிறைந்த தசையுடையதும் ஆகிய முயலைத் தொடராமல் தசைப் பற்றில் லாத பறவை யாகிய இழிந்த காக்கையை நாடித்திரிதல் பயனில்லாத முயற்சியாகும். பயனுடைய நற்செயல்களை விடுத்துப் பயனில்லாத வெறுஞ்செயல்களிற் காலத்தைக் கழிக்கும் வீனர்களின் இயல்பினை விளக்குவதற்கெழுந்த பழ மொழி களில் இதுவும் ஒன்று. விளக்கிருக்கமின் மினித் தீக் காய்தல் என்ற பழமொழியும் இக்கருத்தில் வழங்குவதே யாகும். இப் பழமொழிகள் திருநாவுக்கர சர் பாடிய பழமொழித் திருப்பதிகத்தில் எடுத்தாளப்பெற்றுள்ளன. நாவுக் கரசர் பதிகத்திற் காணப்படும் இப்பழமொழிகளை நக்கீரதேவர் தாம் பாடிய கோபப் பிரசாதத்தில் எடுத்து ஆண்ட திறம் கூர்ந்துணரத் தக்கதாகும்.

பரம்பொருளாகிய தெய்வம் தன்னை வழிபட்டாரது குடும்பத்தை மேன்மேல் உயர்த்தும் பேராற்றலும் பெருங் கருணையுமுடையதென்னும் உண்மையினை,

குடி செய்வ லென்னு மொருவற்குத் தெய்வ

மடிதற்றுத் தான் முந்துறும். எனவருந் திருக்குறளில் தெய்வப்புலவர் தெளிவாக எடுத் துக்கூறியுள்ளார். திருவள்ளுவர் கூறிய இத் தெய்வத் தன்மை இந்திரன் முதலிய தேவர்களுக்கில்லையென்பார், இச்சங்கொண்டு கடுந்தொழில் முடியாக் கொச்சைத் தேவச் என்ருர் நக்கீ தேவர். கச்சம்-ஆடை. கச்சங் கொண்டு என்பதற்கு ஆடையை இறுகவுடுத்து என்பது பொருள். தான் ஐம்புலன்களை அடக்காமல் சாபமெய்தி நின்று. புலன் அடக்கிய கெளதம முனிவனது ஆற்றலை விளக்கியவன் இந்தி தைலின் ஒடுங்காப்ருெமை உம்பர் கோன் ' என் ருர் ஐந்தவித்தானுற்றல் அகல் விசும்புளார் Grpri இந்திரனே சாலுங்கரி என்ருர் திருவள்ளு வரும்.

உள்ளமுள் கசிந் துள்க வலார்க்கலாம்

கள்ளமுள்ள வழிக்கசி வானலன்

எனத் திருநாவுக்கரசரும்,