பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

668

பன்னிரு திருமுறை வரலாறு


மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்றன் கையார் சிலேவிலகிக் காட்டி ற்றே - ஐ வாய் அழல ரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக் கழலரவம் காண் புற்ற கார்,

எனவரும் பாடல் சுவைபெற விரித்துரைப்பதாகும். இது போன்றே இந்நூலிலுள்ள ஏனைய பாடல்களும் கார் காலத்து மேகத் தோற்றத்தைப் புனைந்துரைக்கும் வாயில் ஆகத் தொண்ட வுழவர் ஆரத்தந்த அண்டத்தரும்பெறல் மேகன் ' எனப் போற்றப்பெறும் சிவபெருமானது அருளின் நீர்மையைப் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை படித்து இன் புறத்தக்கதாகும். இந்நூலின் நான் காம் பாடலின் இறுதியடியாகிய காம்பினங்கடோளியக்கார் என்பது, காம்பினங்கொ டோளியக் கார் என் றிருத்தல் வேண்டும். காம் பினங்கொள் தோளி என விளியாக்கி அக்கார் ஆர்த்தது என வினை முடிபு செய்க.

போற்றித் திருக்கலிவெண்பா

சிவபெருமான் உலக உயிர்களுக்கு அருள்புரிதல் வேண்டி அவ்வக் காலந்தோறும் செய்தருளிய அருட் செயல்களை எடுத்துரைத்துப் போற்றுங் கருத்துடன் நக்கீர தேவர் பாடிய பிரபந்தம் போற்றித் திருக்கலிவெண்பா என்பதாகும். இறைவனது பொருள் சேர் புகழைப் போற்றிப் பரவுங் கருத்துடன் திருநாவுக்கரசர் பாடிய திருத்தாண்டகம் போற்றித்திருத்தாண்டகம் என வும் திருவாதவூரடிகள் பாடிய அகவல் போற்றித்திருவகவல் எனவும் பெயர்பெற்று வழங்குமாறு போல, நக்கீர தேவர் பாடிய இக்கலிவெண்பாவும் போற்றித் திருக்கலிவெண்பா எனப் பெயர்பெற்று வழங்குவதாயிற்று.

இக் கலிவெண்பா நாற்பத்தைந்து கண்ணிகளை உடையது. இதன் கண் சிவபெருமான் செய்தருளிய அருட் செயல்கள் விரித்துரைத்துப் போற்றப் பெற்றுள்ளன.

' நேசத்தால் வாயினிர் கொண்டு மகுடத் துமிந்திறைச் சி ஆயசீர்ப் போனகமா அங்கமைத்துத் - தூய சீர்க் கண்ணிடந்த் கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி - மண் ணிேைமற்