பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர'தேவ நாயஞர் 67は

தலாகிய பல்வேறு முயற்சிகளும் ஆற்றுப்படையாகிய இத்துறையில் அடங்குமென்பதும் ஆசிரியர் கருத்தென்பது நன்கு விளங்கும், ஆகவே அவர் கிளந்தோதிய கூத்தர் பாணர் பொருநர் விறலியென் போர் கூற்ருக அமைந்த ஆற்றுப்படைகளே யன் றிப் புலவர் முதலியோர் கூற்ருக அமைந்த ஏனைய ஆற்றுப்படைகளும் தொல்காப்பியனர் அறிவுறுத்திய ஆற்றுடபடை யிலக்கணத்தின் படி யமைந்த ஆற்றுப்படைகளெனவே கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறு ஆற்றுப்படையென்னுந் துறையிலமைந்த செய்யுட்களின் பொதுவியல்பினைக் கூர்ந்து நோக்குங்கால் பத்துப் பாட்டுள் முதற் பாட்டாகவும் பதினுெராந் திருமுறையிற் பதினேழாவது பிரபந்தமாகவும் தொகுக்கப் பெற்றுள்ள திருமுருகாற்றுப்படையென்ற பனுவல், தொல் காப்பியர்ை கூறிய ஆற்றுட்படை யிலக்கணத்தின் படி யமைந்ததே யென்னும் உண்மை நன்கு தெளியப்படும். இங்ங்னம் எல்லாவகையான ஆற்றுப்படைகளுக்கும் பொது விலக்கணமாக அமைந்ததே ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெரு அர்க்கு அறிவுறி இச், சென்று பயனெதிரச் சொன்ன பக்கம் ' என வரும் தொல்காப்பியத் தொடராகும். இத்தொடர் க்கு,

  • இல்லறத்தை விட்டுத் துறவறமாகிய நெறியில் நிற்றல் நன்றென்றும் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினலே தான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டு ந் திரிந்து, பெருதார்க்கு இன்ன விடத்தே சென்ருற் பெறலாம்" என்று அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச் சென்று அக் கந் தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடு ' எனப் பொருள் கூறித் தெய்வத்தினிடத்து ஆற்றுப்படுத்துவதாகிய ஆற்றுப்படைக்குரிய சிறப்பிலக்கணமாகக் கொண்டார் நச்சினர்க்கினியர். இங்ங்ன மன்றி இதனை ஆற்றுப் படையின் பொதுவிலக்கணமாகவே கொள்ளினும் தெய் வத்தின் பால் உய்ப்பதாகிய இத் திருமுருகாற்றுப்படை அப்பொது விலக்கணத்தின் படி யமைந்த ஆற்றுப்படைகளு ளொன் ருதல் புலனும்.

முருகாற்றுப்படை யென்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தானுேர் இரவலனை வீடுபெற்ரு