பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் öግ8

பாற் செலுத்தவல்ல தலைமை தமக்கு உண்டென்பதனையும் எண்ணி, வறியோர்க்கு வழிகூறியனுப்புதல் உலகியலுக்கு ஒத்ததாகலின், கூத்தர் முதலியோர் கூற்ருகப் புலவர் பாடிய அவ்வாற்றுப்படைகள் யாவும் ஆற்றுப்படுத்துவோ ராகிய கூத்தர் முதலியோர் பெயராற் பெயர் பெற்று வழங்குவனவாயின. இங்ங்ணம் கூத்தர் முதலிய பிறர் கூற்ருகச் செய்யுள் செய்யுங்கால் தம் தலைமை தோன்ருது ஆற்றுப்படுத்தவல்ல புலனுடைய மாந்தர் ஏனைப் பொதுமக்களைப் போன்று தம் தலைமை தோன்றத் தம்மையொத்த புலவரை ஆற்றுப்படுத்தினு ரென்றல், கற்றவழி படங்கியொழுகும் அவரது மன நிலைக்கு ஏற்புடையதன்ரும். அங்ங் ைமாகவும் மெய்ஞ்ஞானத்தால் உயிர் முனைப்படங்கி இறைவனுடைய திருவடிகளை இடை விடாதெண்னும் நலம்புரிகொள் கைப் புலவஞெருவன் இறைவன்பால் ஆற்றுப்படுத்தற்குரிய தகுதியுடையேன் யான் என்னும் ஆன்மபோதத்துடன் முருகனையடைதற்கு உரிய நெறிமுறையைப் பிறர்க்கு அறிவுறுத்தினுனென்றல் சீவன் முத்தணுகிய அவனது சிறப்பியல்புக்குச் சிறிதும் ஒவ்வாது. ஆகவே இவ்வாற்றுப்படை அப்புலவனது தலைமை தோன்றப் புலவராற்றுப்படையெனப் பெயர் பெருதாயிற்று. அன்றியும் எல்லாம் வல்ல இறைவனுகிய முருகனையடையும் நெறியறிந்து சென்று சேர்தல் சில் வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினராகிய மக்களால் இயலா தென்பதும், அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகனுகிய அவ்விறைவனே தன் அருள்காரணமாக நம்மை நோக்கி எளிவந்து தோன் றி அருள்புரியுமியல்பினன் என்பதும், அப்பெருமான் நம்பால் எளிவந்து தோன்றி அருள் புரியும்படி அவனை நம்வழிப்படுத்தும் வழிபாட்டு முறைகளை உணர்த்தும் நிலையில் இப்பாடல் அமைந் தமைபற்றி இது முருகாற்றுப்படையென்னும் பெயர்த் தாயிற்றென்பதும் பண்டைச் சான்ருேர் துணியாகும். இந்நுட்பம்,

' குறமகள்

முருகியம் நிறுத்து முரனின. ருட்க

முருகாற்றுப்படுத்த உருகெழு வியனகர் ’ எனவரும் இத்திருமுருகாற்றுப்படைத் தொடராலும்,

43