பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 87ኝ

பாடிய ஆசிரியராகிய மதுரைக் கணக்காயனர் மகளுர் நக் கீரனுரை வேறுவேறு காலத்து வாழ்ந்த இருவரெனக் கூறுதல் சிறிதும் பொருந்தாது. திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரனரும் நெடுநல் வாடை பாடிய நக்கீரஞரும் மதுரைக் கணக்காயனர் மகனுராகிய ஒருவரேயென்பது மதுரைக் கணக்காயனுர் மகளுர் நக்கீரனுர் ' என இப் பாடலின் உரைகளில் தந்தை பெயரோடினேந்து ஒரே தொடராற் குறிக்கப்படுதலாலும், இவர் பாடிய திருமுரு காற்றுப்படையிலும் நெடுநல் வாடையிலும் பிற செய்யுட் களிலும் சொல் வழக்குகள் ஒத்து நிற்றலாலும் நன் குணரப்படும். சூர்மருங்கறுத்த சுடரிலே நெடுவேல்" (அகநானூறு-50) என மதுரை மருதனிள நாகருைம், :: உருவச் செந்தினை குருதியொடு தூஉய், முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள் ' (அகநானூறு-22) என வெறிபாடிய காமக் கண்ணியாரும் கூறும் தொடர்கள் திரு முருகாற்றுப்படையில் ' சூர்முதல் தடிந்த சுடரிலே நெடு வேல் ' (முருகாற்.-46) எனவும், " உருவப்பல் பூ தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள், முருகியம் நிறுத்து முரணினருட்க, முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனகர் ' (முருகாற்.-241-247) எனவும் வரும்தொடர் களோடு ஒத்து நிற்றலைக் கூர்ந்து நோக்குங்கால், இப் புலவர்களனைவரும் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர் களென்பது நன்குபுலனுமாதலானும், மதுரைக் கணிக்காய ஞர் மகளுர் நக்கீரனரே இத் திரு முருகாற்றுப்படையைப் பாடியவரென்றும் இவரே பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டு நெடு நல் வாடையைப் பாடியவரென்றும் பண்டையோர் கூறும் கொள்கை உறுதிப் படுதல் காண்க. மதுரைக் கணக்காயனர் மகளுர் நக்கீர ஞர் பாடியனவாக நற்றிணையில் ஏழு செய்யுட்களும், குறுந் தொகையில் எட்டும், அகநானூற்றிற் பதினேழும், புற நானூற்றில் மூன்றும் தொகுக்கப்பெற்றுள்ளன. கீரன் என்பது இவரது பெயர். 'ந' என்பது சிறப்புணர்த்தும் அடைமொழி. மதுரைக் கணக்காயனுர் மகளுர் நக்கீரர்ை

1. பெரும்பேராசிரியர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் தாம் பதிப்பித்த பத்துப்பாட்டின் இரண்டாம் பதிப்பிலே பாடிளுேர் வர லாறு' என்னுந் தலைப்பில் நக்கீரரைக் குறித்து எழுதுங்கால் இத்த கைய ஒப்புமைப் பகுதிகளைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள் ளர்கள். ஆண்டுக் காண்க.