பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678

பன்னிரு திருமுறை வரலாறு


என இவர் சுட்டப்படுதலால் இவருடைய ஊர் மதுரை யென்பதும் இவருடைய தந்தையார் மாணுக்கர்களுக்கு கல்வி பயிற்றும் ஆசிரியராகத் திகழ்ந்தவரென்பதும் நன்கு புலம்ை. இவர் இறையனாகப் பொருளுக்கு நல்லுரை கண்டு அவ்வுரையினைத் தம் புதல்வராகிய கீரங்கொற்ற ர்ைக்குரைத்தார் என இறையனர் அகப் பொருளுரை கூறும். இவர் மதுரைப்பட்டிமண்டபம் புகுந்து வடமொழியே சிறந் தது தமிழ் தாழ்ந்ததெனக்கூறிய குயக்கோடன் என்பவனை இறக்கப் பாடிப் பின்பு சிலர் வேண்ட அவனைப் பிழைக்க வும் பாடினர் என்றதொரு செய்தி தொல்காப்பியச் செய்யு ளியலுரையிற் பேராசிரியர் மேற்கோளாகக் காட்டிய நக்கீரர் அங்கதப் பாடல்களால் நன்கு புலனுகின்றது. பதினெராந்திருமுறையில் ந க் கீ ர் பாடியனவாகத் தொகுக்கப் பெற்ற பிரபந்தங்களில் திருமுருகாற்றுப்படை யொன்றே மதுரைக் கணக்காயனர் மகளுர் நக்கீரனுராகிய சங்கப் புலவர் பாடிய பனுவலாகும். ஏனைய ஒன்பது பிரபந்தங்களும் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்தவ ராகக் கருதப்படும் நக்கீர தேவ நாயனராற் பாடம் பெற்றன வாகுமென்பது முன்னர் விளக்கப்பெற்றது.

பூதத்தால் மலைமுழையிலடைக்கப்பட்டு வருந்திய நிலை யில் நக்கீரனுர் இத் திருமுருகாற்றுப்படையைப் பாடி முருகப்பெருமானுற் சிறைவீடு செய்யப்பெற்று உய்ந்தா எனப் பிற்காலத்தார் கூறுங்கதை நக்கீரனுர் மன நிலைக் கும் வரலாற்று நெறிக்கும் முற்றிலும் மாறுபட்டதென் பது முன்னர் விளக்கப்பட்டது. முருகன் திருவருளால் வீடுபேற்றுக்குரிய திருவடிஞானம் கைவரப்பெற்ற சீவன் முத்தசாக மதுரையில் வாழ்ந்த நக்கீரனரென்னும் புலவ பெருமான் முருகப்பெருமானது திருவடிப் பேரின்பத்தை யடைய விரும்பிய முதுவாயிரவலனை நோக்கி நான் பெற்: இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் அருட்குறிப்புடன் முருகப்பெருமானது பேரருளின்பத்தையெடுத்துரைத்து அவ்விறைவன்பால் ஆற்றுப்படுத்தும் நிலையில் இத்திரு முருகாற்றுப்படையைப் பாடியுள்ளாரென்பதே நச்சினுர் கினியர் முதலிய பண்டைச் சான் ருேசது துணியாகும்.

உலகத்துப் பல்லுயிர்களும் மகிழ நீலக்கடல்மே தோன்றும் காலையிளங் கதிரவனைப் போன்று நீல மயிலின் மேல் செம்மேனிப் பேரொளியின கைத் திகழ்வோன் முருக