பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 683

காமநுகர்ச்சியில்லாத இறைவனுகிய முருகப்பெருமான் குறவர் மகளாகிய வள்ளி நாச்சியாருடன் கூடித் தனக்கோர் அறியாமை தோன்ற நகையமர்ந்து விளையாடு வதனை விளக்குவது,

ஒருமுகம், குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்றே ' என வரும் திருமுருகாற்றுப்படைத் தொடராகும். முருகப் பெருமான் வள்ளியொடு நகையமர்ந்து கூடியிருத்தலின் குறிப்பு உலகத்துப் பல்லுயிர்களும் ஆணும் பெண்ணுமாய் அன்பிற்ைகலந்து இன்புற்று இல்வாழ்க்கை நடத்தற் பொருட்டேயாம் என்பதனைத்,

தென்பாலு கந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந் தான் பெரும்பித்தன் காணேடி பெண்பா லுகந்திலனேற் பேதா யிருநிலத்தோர் வின் பா லியே கெய்தி வீடுவர் காண் சாழலோ எனவரும் திருவாசகச் செழும்பாடலை எடுத்துக் காட்டி நச்சிஞர்க்கினியர் நன்கு விளக்கியுள்ளார்.

ஆதிபகவனகிய பெருமான் தன் அடியார்கட்கு அருளும் முறையும் அங்ங்ணம் அருளவல்ல அவ்விறைவனது இயல்பும் இன்ன தன்மையவென யாவராலும் அளந்தறிந்து ஒதுதற்குரிய எல்லையைக் கடந்து நிற்பனவாதலின் அவை பற்றிச் சிற்றறிவினராகிய உயிர்களாற் செய்யப்படும் ஆராய்ச்சி யாதுமில்லை. அங்ங்னமாதலின் கல்வி கேள்வி களால் தகுதியுடைய பெரியோர்கள் பிறவி நிலைக் கோள்களான் வரும் இடையூறுகள் தம்மையடைந்து நலியாதபடி முதல்வனுகிய இறைவன் திருவடியைச் சார்ந்து அப்பெருமான் அடியார்க்கு அருளும் வண்ணமும் அவ் இறைவனது தி ரு வ ரு ள் மாண்பும் அவன்பால் கேட்டுணர்தற்குரியர் எனத் திருப்பா சுரப்பதிகத்தில் ஆளுடையபிள்ளையார் அறிவுறுத் தியுள்ளார். பாச ஞானத் தாலும் பசு ஞானத்தாலும் உணர்தற்கரிய பரம்பொருளைப் பதிஞானமாகிய திருவருள் ஞானமொன்றிேைலயே உணர்ந்து உய்தி பெறுதல் கூடுமென்ற இவ்வுண்மை,

" நின்னளந்தறிதல் மன்னுயிர்க் கருமையின்

நின்னடியுள் ளிவந்தனன் நின்ளுெடு புரையுநரில்லாப் புலமை யோய் ”

AASAASAASAASAA

1. திருஞான சம்பந்தர் தேவாசம், திருப்பாசுரம் 4-ம் பாடல்