பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயனுர் కః

வீசும் உச்சி வேளையிலே தரையிற் பாதம் படுந்தொறும் தசை தீய்ந்து நாறும் கடுஞ்சு வழியில் முதிர்ந்து காய்ந்த மரங்கள் நிறைந்த முள் நிரம் பிய சூழலிலே விலங்கினங் களை அவற்றின் இனக் குரலோசையால் எழுப்பி அவற்றைத் தனது வேட்டை நாய் கடித்து இழுக்கும்படி அவற்றின் மேற் கூரிய அம்புகளை எய்து கொல்வான். அங்ங்னம் தன்னுற் கொல்லப்பட்ட விலங்கின் தசையினை அறுத்தெடுத்து விறகினைக் கடைந்து மூட்டிய தீயிலே காய்ச்சி அவற்றுள் நறுமணமும் சுவையுமுடைய இறைச்சி களைத் தான் சுவைத்துப் பார்த்து நல்லனவற்றைக் தாளத்தி யிறைவனுக்குரிய திருவமுதாக வேறு வைத்துக் கொள்வான். பின்னர்க் குளிர்ந்த சுனையிலேயுள்ள நீரை இறைவனுக்குரிய திருமஞ்சனமாகத் தன் வாயே கலசமாக முகந்து கொண்டு அருச்சனைக்குரிய நறுமலராகச் செந் நிறப் பூங்கொத்துக்களைத் தன் செந்நிற மயிர் முடியிற் செருகிக் கொண்டு, ஒரு கையில் திருவமுதாகிய இறைச்சி யையும் மற்ருெரு கையில் வில்லையும் அம்பையும் ஏந்திக் கடுங் குரலுடைய வேட்டை நாய் தன்னைப் பின் தொடர்ந்து வரத் திருக்காளத்தி யிறைவனை வழிபடுதற் பொருட்டுக் கடும் பகலிலே சென்றனன்.

நாட்காலையிலே காளத்தியிறைவனுக்குப் பூசனை புரியுங் கடமையுடையவனுகிய மறையோன், திருப் பரிவட்டத்தை யணிந்து திருமஞ்சனமாட்டி நறுமலர், நறும் புகை, விளக்கு, திருவமுது எனச் சிவாகம நூல்களிற் சொல்லிய முறையிற் சிறிதும் குறையாதவாறு கொண்டு திருமேனி யிற் பொருந்த அணிந்த மலர் மாலையும் மேலே தூக்கிக் கட்டிய நறுமலர்த் தொடையும் அமைய அணிசெய்து அருச்சித்து, இறைவன் திருமுன்னர்ச் சிறப்பொடு தெரி வித்தற்குரிய கையடையாளங்களாகிய முத்திரைகளைத் திருத்தமுறக் காட்டிச் சிவமந்திரங்களையோதி இறை வனைத் தியானித்து வலம் வந்து வழிபட்டுச் சென்றனன். அவன் சென்ற பின்னர் ஒரு கையில் ஊனமுதமும் மற்ருெரு கையில் வில்லும் அம்பும் கொண்டு அங்கு வந்த வேடுவன் சிவலிங்கப்பெருமான் முடிமீது அணியப் பெற்றிருந்த లిడీ) முதலியவற்றைச் செருப்பணிந்த காலினுல் நீக்கித் தன் வாயிற் கொணர்ந்த நீரைத் திருமஞ்சனமாக ஆட்டினன். தனது தலைமுடியிற் செருகிய பூங்கொத்துக்களை இறைவன்

44