பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லாட தேவ நாயகுt 693

தவமுனிவர்களும் கானவர் தலைவனுகிய கண்ணப்பனது பேரன்பின் திறத்தை இன்னிசையால் ஏத்திமகிழ்ந்தனர். திருக்கண்ணப்பணுகிய அத்தோன்றல் இறைவளுேடு பிரிவறக்கலத்தலா கிய சிவகதியைப்பெற்று ஈறிலாப் பேரின்ப வாழ்வினை யெய்திஞன்."

என்பது திருக்கண்ணப்ப தேவர் திருமறமென்னும் இப்பனுவலில் விரித்துரைக்கப்பெற்ற செய்தியாகும். கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர் என நம்பியாரூரராற் போற்றப்பெற்ற கண்ணப்ப நாயனுரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் தேவாரத் திருப்பதிகங்களிலும் திருவாசகத்தும் ஒரளவு சுருக்கமாகக் குறிப்பிடப்பெற்று உள்ளன. கண்ணப்பரது வரலாற்றை முதன்முதலாக விரித்துக்கூறிய பெருமை இத் திருமறமென்னும் பனுவலை இயற்றிய நக்கீரதேவசிக்கே யுரியதாகும். இவராற் பாடப் பெற்ற இத் திருமறம் கண்ணப்பாது வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் விரித்துக்கூறுவ தற்குப் பெரிதும் ஆதர வாயமைந்ததென்பது பெரிய புராணத்திற் கண்ணப்பநாயனுர் புராணத்தையும் இத் திருமறத்தையும் ஒப்புநோக்கி ஆராய்வார்க்கு இனிது விளங்கும்.

6. கல்லாட தேவ நாயனுர்

பதினுெராந் திருமுறையாசிரியர்களுள் கல்லாட தேவ நாயனுரும் ஒருவர். இவர் பாடிய பிரபந்தம் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்பது. இந்நூல் பதினுெராந் திரு முறையிற் பத்தொன்பதாவது பிரபந்தமாகத் தொகுக் கப் பெற்றுளது நக்கீரதேவ நாயனர் பாடிய திருக்கண்ணப்ப தேவர் திருமறத்தை யடுத்து அதே பெயருடையதாய்த் திகழும் இந்நூல் முறைப்படுத்தப் பெற்றிருத்தலை யுற்று நோக்குங்கால், இப்பனுவலைப் பாடிய கல்லாட தேவரென் பார் நக்கீர தேவர் காலத்திலோ அன்றிச் சிறிது பிற்பட்ட காலத்திலோ வாழ்ந்தவராதல் வேண்டுமென்பது நன்கு பெறப்படும். எனவே இவ்வாசிரியர் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவரெனக் கொள்ளுதல் பெரிதும் பொருத்தமுடையதாகும்.

கல்லாடர் என்னும் பெயர் கடைச் சங்கப் புலவரொரு வரையும் பிற்காலப் புலவர் சிலரையும் குறித்து வழங்கக்