பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

5

திருவாதவூரடிகள்

நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்த மேவிய சீர் ஆதியே எனவும்,

போதலர் சோலைப் பெருந் துறையெம்

புண்ணியன் மண் ணிடை வந்திழிந்து ஆதிப் பிரமம் வெளிப் படுத்த

அருளறிவா ரெம் பிரானுவாரே' எனவும்,

நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநமவெனப்பெற்றேன் தேனுயின்னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானே வந்தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள் செய்தான் ஊஞரு முயிர்வாழ்க்கை யொறுத்தன்றே வெறுத்திடவே எனவும்,

உய்யுநெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை ஐயனெனக் கருளியவா ருர்பெறுவா ரச்சோவே எனவும் வரும் திருவாசகத் தொடர்களில் திருவாதவூரடிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருவினைகளால் உளவாம் இன்பத் துன்பங்கள் இரண் டையும் ஒரு படித்தாக எண்ணி வாழ்க்கையில் விருப்பு வெறுப் பின்றிப் பழ படுகிறது. இந்நிலை யெய்திய உயிர்களுக்கு ஆணவமலம் கழன் ருெழியும் தகுதியுளதாகும். இத்தகுதியினை மலபரிபாகம் என வழங்குதல் மரபு. இங்ங்னம் இருவினையொப்பும் மலபரி பாகமும் வந்தெய்திய நிலையில் உயிரினது அறிவின்கண்னே

இறைவனது திருவருள் பதியப்பெறும். இந்நிலையினைச்

கும் மனநிலையே இருவினையொப்பு என்று பேசப்

சத்திநிபாதம் எனக் கூறுவர். இறைவன் திருவருளை நாடி

உலகப்பயன் கருதாது வீடுபேற்றை அவாவி நின்று தம்

செயலற்றிருத்தலும், இறைவனையடையும்நெறி யாதென . ஆராய்தலும், அகத்தால் உலகத்தை முற்றுந் துறந்து புறத்தே உலகியலோடு ஒத்து வாழ்தலும், அகத்தும் புறத் தும் உலகினை முற்றத் துறந்து சிவஞானம் நல்கும் அருட் குரவன் ஒருவனையே நாடித்திரிதலும் என இவ் அருட்பதிவு நால் வகைப்படும். இவற்றுள் நாலாஞ் சத்திநிபாதமாகி முடிந்த நிலையில் நின்றே திருவாதவூரர் திருப்பெருந்து யிற் குருமூர்த்தியைக் கண்டு இறைஞ்சினர் எனக் கட மாமுனிவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இருக