பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லாட தேவ நாயனுர் 69?

தோண்டியெடுத்து இறைவனது கண்ணில் அப்பிய செய்தி யும், அந்நிலையில் இறைவனது கண் நலம் பெற மற்ருெரு கண்ணிலும் குருதி நீரொழுகக் கண்ட திண்ணணுர் தமது மற்ருெரு கண்ணையும் தோண்டத் தொடங்கியபொழுது சிவபெருமான் தன்னுடைய திருக்கையில்ை திண்ணணு ருடைய இருகைகளையும் சேரப்பிடித்துக்கொண்டு " நம் கண்ணின் புண் விரைவில் நீங்கி நலம் பெற்றதனைக் காண் பாயாக. நீ மிகவும் நல்லை" எனப் பாராட்டித் திருவருள் புரிந்தமையும் ஆகிய வரலாற்றுச் செய்திகள் இத்திருமறம் என்னும் பிரபந்தத்தில் சுருக்கமாகவும் சுவை பொருந்தவும் விரித்துரைக்கப்பட்டன. அன்பின் வடிவாகிய கண்ணப்பரென் னும் திருவேட்டுவரது திருவடியைக் கைதொழுத அளவில் கரையின் றி மேன்மேலுளவாம் பிறவிப்பிணிக்குக்காரணமாகிய வினைத்தொடர்பு அறவே கெட்டுப்போம் என்ற உண்மையை இப்பி பந்தத்தின் முடிந்த பொருளாகக் கல்லாட தேவர் நன்கு அறிவுறுத்தி உள் ளமை கண்ணப்ப நாயனுர்பால் அவர் கொண்டி, பேரன்பினை இனிது விளக்குவதாகும்.

திண்ணணுர், காளத்தி மலைமீதமர்ந்த சிவலிங்கப் பெருமானை க்கண்டு வழிபட்டுத் தமது கண்ணைத்தோண்டி அப்பிக்கண்.ணப்பராயிஞர் என்பதே வரலாறு கல்லாடதேவ நாயனுராகிய இவ்வாசிரியர், திண்ணணுர் கானப் பேருறை கண்ணுதலை வழிபட்டாரென இப்பிரபந்தத்திற் குறிப்பிட்டு உள்ளார் கானப்பேர் என்பது இக்காலத்திற் காளையார் கோயில் என வழங்கும் பாண்டிநாட்டுத் திருத்தலமாகும். இத்தலத்திற்கும் கண்ணப்பர் வரலாற்றிற்கும் யாதொரு தொடர்புமில்லை. அங்ங்னமாகவும் கண்ணப்பரது வழி பாட்டினையேற்றுக்கொண்ட சிவபெருமான க் குறிக்கு மிடத்துக் கானப்பேருறைகண்ணுதல் என இவ்வாசிரியர் கூறியுள்ளார். கண்ணப்பர்க்கு அருள்செய்த காளத்திப் பெருமான் பாண்டி நாட்டின் கண்ணதாகிய கானப்பேர் என்ற திருத்தலத்திலும் தன்னடியார்களுக்கு அருள் சுரக்கும் திருக்குறிப்புடன் எழுந்தருளியுள்ளான் எனக் கூறும் வாயிலாகத் தாம் கானப் பேர் என்ற தலத்திற் கொண்டுள்ள பேரீடுபாட்டினை ப் புலப்படுத்தி மகிழ்தல் இவ்வாசிரியரது. நோக்கமெனத் தெரிகிறது. எனவே கல்லாடதேவ நாயனராகிய இவ்வாசிரியர் பாண்டிநாட்டில்