பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700

பன்னிரு திருமுறை வரலாறு


வொடு, நல்லார் பழிப்பில் ' என்னும் முதற் குறிப்புடைய செய்யுட்கள் இரண்டினைத் தொல்காப்பியச் செய்யுளியல் 175-ஆம் சூத்திரவுரையில் நெடிலடி நான்கினல் வரும் கலித்துறைக்கு உதாரணமாகக் காட்டியிருத்தலையும் உற்று நோக்குங்கால் இந்நூலாசிரியராகிய கபில தேவ நாயனர் கி. பி. ஒன்பதாம நூற்ருண்டினை யடுத்து வாழ்ந்தவரென் பது நன்கு புலகுைம்.

பதினுெராந்திருமுறையாசிரியருள் ஒருவராகிய கபில தேவநாயனரும் கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் ஒரு வரேயெனக் கருதுவாருமுளர். கட்டனேக் கலித்துறை யென்னும் செய்யுள் வகை டைச் சங்க காலத்தில் இல் லாத புதிய யாப்பாகும். இரட்டைமணிமாலையென் பது இப் புதிய யாப்பாகிய கட்டளைக் கலித்துறையும் பழைய யாப்பாகிய வெண்பாவும் என இருவகைச் செய்யுட்களும் விரவத் தொடுத்த புதிய பிரபந்தமாகும். இப்பிரபந்தத்தை முத்ன்முதல் அருளிச் செய்தவர் காரைக்காலம்மையா ரென்பதும் இப்பிரபந்தம் கடைச் சங்க காலத்தில் வழங்கப் பெருத விருந்து என்னும் பனுவல் வகையைச் சார்ந்த தென்பதும் முன்னர் விளக்கப்பெற்றன. எனவே திரு விரட்டைமணிமாலையென்னும் பிற்காலப் பிரபந்தத்தைப் பாடிய கபிலதேவநாயனுரைக் கடைச்சங்கப் புலவராகிய கபிலர் எனக்கொள்ளுதல் ஒரு சிறிதும் பொருந்தாதென்க. அன்றியும் அஞ்சலி, அரன், அநங்கன், ஆலிங்கனம், இச்சை, ஏகதந்தம், கணபதி, கட்டங்கம், காபாலி, சர ணம், சலம், சிங்கம், சித்தம், ஞானம், திக்கு, நாமம், பரஞ்சோதி, பாகீரதி, பாவனை, புண்டரிகம், போகபந் தம், போதகம், மது கரம், மைத்துனன், வார்த்தை, விதி வசம், விநாயகன் முதலிய வடசொற்களும், உற்றனங்கள், எத்துக்கு வந்தாய், காண் கிடாய் முதலிய பிற்காலச் சொல் வழக்குகளும், சண்டீசர் வரலாறு முதலிய புராணச் செய்தி களும் கபிலதேவ நாயனர் பாடல்களில் இடம் பெற் றுள்ளன. இக்குறிப்புக்களை நோக்குமிடத்து இவ்வாசிரி யர் கடைச்சங்கப் புலவராகிய கபிலரல்லரென்பதும் அப் புலவர் பெருமானது பெயரைத் தமக்குரிய பெயராகப் பெற்றுக் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதிப் பகுதி யில் வாழ்ந்த திருவருட் செல்வரென்பதும் இனிது புலனுகும்.