பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபில தேவ நாயஞர் 701

கபிலதேவநாயனர் பாடிய சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை யில் முட்பத்தேழு பாடல்கள் காணப்படுகின்றன. வெண்பாவும் கட் ாேக்கலித் துறையுமாகிய இருவகை மணிகளால் தொடுக்கப்படும் இாட்டைமணிமாலையில் இரு திறப்பாக்களும் ஒத்த எண்ணிககையுடையனவாய் அமைந் திருத்தல் வேண்டுமென்பது விதி. சிவபெருமான் திரு விரட்டை மணிமாலையாகிய இதன் கண் பத்தொன் பது வெண்பாக்களும் பதினெட்டுக் கலித்துறைகளுமே உள் ளன. அந்திமதிமுகிழான் ' என்ற பாடலை முதலாகக் கொண்டு அந்தாதித் தொடையுடன் அமைந்த இப்பனுவ லின் இறுதியிலுள்ள 37-ஆம் செய்யுளின் அந்தம் முதற் செய்யுளின் ஆதிச் சொல்லுடன் மண்டலித்து முடியும் நிலை யில் அமையவில்லை. எனவே இத்திருவிரட்டை மணிமாலை யின் இறுதியிலுள்ள செய்யுட்கள் சில காலப் பழமையால் ஏடுகள் சிதைந்த நிலையில் மறைந்திருத்தல் வேண்டு மெனக் கருத வேண்டியுளது இரட்டைமணிமாலையென் னும் பிரபந்தம் இருபது செய்யுட்களால் அமைதல் மரபு. இரட்டைமணிமாலையைச் சிவபெருமானுக்கு அணிந்து மகிழக் கருதிய கபிலதேவநாயனர் அம்மணிமாலை இரட்டை வடமாக அமையும் வண்ணம் நாற்பது செய்யுட்களாற் பாடியணிந்தாரெனக் கருத இடமுண்டு. இக்கருத்துப் பொருந்துவதாயின் இதன்கண் மறைந்து போன செய் யுட்கள் 38, 39, 4 என்னும் எண் பெற்றன எனக்கூறுதல் பொருந்தும். காரைக்காலம்மையார் பாடிய திருவிரட்டை கணிமாலை கட்டளைக் கலித்துறை முன்னும் வெண்பா பின் னுமாகத் தொடுக்கப்பெற்றிருத்தலையும் கபிலதேவ நாயனுர் பாடிய திருவிரட்டைமணிமாலை வெண்பா முன்னும் கட்டளைக் கலித்துறை பின்னுமாகத் தொடுக்கப்பெற்றிருத் தலையும் நோக்குமிடத்துக்கட்டளைக் கலித்துறை வெண்பா என்னும் இருவகை மணிகளுள் எந்த மணியை முதலாகக் கொண்டு தொடுப்பினும் அவ்விருவகைமணிகளாற்ருெடுக் கப்பெற்ற மாலை இரட்டைமணிமாலை யென்னும் பெயர்க் குரியதாம் என்பது நன்கு தெளியப்படும்.

சிவபெருமான் திருவிரட்டைமணிமாலையில் அமைந்த செய்யுட்கள் யாவும் நவில்தொறும் சுவை பயப்பனவாக

வுள்ளன. இறைவனை நோக்கிப், பெருமானே நீ நினது