பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரண தேவ நாயஞர் 703

வோர் கைத்திறத்தால் உருமாறி யிருத்தலால் அவற்றின் உண்மைப் பொருளை அறிந்துகொள்ள இயலவில்லை.

கபிலதேவநாயனர் பிரபந்தங்களில் அவர்க்குக் காலத் தால் முற்பட்ட காரைக்காலம்மையார், திருநாவுக்கரசர் முதலிய ஏனைத்திருமுறையாசிரியர்கள் திருவாய் மலர்ந் தருளிய திருப்பாடல்களின் சொற்பொருள் நலங்கள் ஆங் காங்கே இடம் பெற்றுள்ளன.

தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதந்

தெளியாதார் தீநெறிக்கட்செல்வர் "

எனவரும் சிவபெருமான் திருவந்தாதிச் செய்யுள், திருவீழிமிழலையான ச் சேராதார் தீ நெறிக்கே சேர்கின் ருரே ' எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழிப் பொருளைத் தன்பாற்கொண்டு திகழ்தல் காண்க.

இவ்வாசிரியர் பிறந்த நாடு, ஊர், குலம் முதலிய செய்திகளை யறிந்துகொள்ளுதற்குரிய சான்றுகள் கிடைக்க வில்லை. இவர் தம் பாடல்களிற் போற்றிப் பரவிய சிவ தலங்களைப்பற்றிய குறிப்புக்களைக் கூர்ந்து நோக்குங்கரல் இவர் சிவதல யாத்திரையினை மேற்கொண்டு வாழ்ந்த சிவநெறிச் செல்வரென்பது நன்கு விளங்கும். இவராற் போற்றப்பெற்ற திருத்தலங்களுட் பெரும்பாலன சோழ நாட்டுர்களாக இருத்தலை நுணுகி நோக்குமிடத்து இவ் வாசிரியர் சோழநாட்டில் நெடுங்காலம் வாழ்ந்தவரென் பது ஒருவாறு உய்த்துணரப்படும்.

8. பரண தேவ நாயனர்

பதினெராந் திருமுறையில் இருபத்து மூன்ரும் பிர பந்தமாக முறைப்படுத்தப்பட்டுள்ள சிவபெருமான் திருவந் தாதி யென்ற பனுவல் பரணர் என்னும் பெயருடைய புலவர் பெருமாறை பாடப்பெற்ற தென்பது,

ஒன்றைப் பரணர் உரைத்த அந்தாதிபல ஒன்றைப் பகரில் ஒருகோடி-ஒன்றைத் தவிரா துரைப்பார் தளரார் உலகில் தவிரார் சிவலோகந் தான். என அவ்வந்தாதியின் இறுதியிலுள்ள வெண்பாவில்ை இனிது விளங்கும். திருவருட் செல்வராகிய இந்நூலா சிரியர் கடைச்சங்கப் புலவராகிய பரணரது பெயரைத் தமக்