பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/720

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704

பன்னிரு திருமுறை வரலாறு


குரிய பெயராகப் பெற்றமை கரு கிப் பரண தேவ நாயஞர் என அழைக்கப் பெற்றனரெனக் கொள்ளுதல் பொருந்தும்.

இவ்வாசிரியர் பிறந்த நாடு, ஊர் குலம் முதலியன பற்றித் தெரிந்து கொள்ளுதற்குரிய சான்றுகள் கிடைக்க வில்லை. நக்கீர தேவர், கல்லாட தேவர், கபில தேவர் என்போர் பாடிய பிரபந்தங்களின் பின் இவர் பாடிய சிவ பெருமான் திருவந்தாதி வரிசைப்படுத்தப் பெற்றிருத்தலை நோக்குங்க ல் பரண தேவ நாயனரெனப் போற்றப்பெறும் இவ்வாசிரியர் முற்கூறிய பெருமக்கள் வாழ்ந்த கால மாகிய கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதியில் வாழ்ந்தவரென்பது நன்கு பெறப்படும். கபில தேவ நாயனர் பாடிய சிவபெருமான் திருவந்தாதியை அடியொற்றி இவர் பாடிய சிவபெருமான் திருவந்தாதியும் ஒன்றுரைப்பீர்' என ஒன்று முதலாகத் தொடங்கி 'ஒரைந் துரைக்க வல்லார்க்கு ஒன்று' என ஒன்றிருக மண்டலித்து முடிந்துளது. இவ்வந்தாதி நூறு - வெண்பாக்களால் இயன்றுளது. இதன் கண் 5-ஆம் பாடலின் மூன்ருமடியும் 14-ஆம் பாடலின் முதலடியும் 42-ஆம் பாடல் மூன்ருமடியின் இறுதிச் சீரும் சிதைந்துள்ளன.

எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானது இறைமைத்தன்மையும் அவ்விறைவன் கோயில்கொண்டு வீற்றிருந்தருளுந் திருப்பதிகளும் ஆட்பாலவராகிய அடியார்களுக்கு அருள்புரிதல் வேண்டி இறைவன் செய்தருளிய அருட்செயல்களும் அம்மையப்பனுகிய இறைவனை வழிபடும் நெறிமுறைகளும் அங்ங்னம் வழி படுதலால் இவ்வுலகமக்கள் அடைதற்குரிய இம்மைமறுமை இன்பங்களும் இவ்வந்தாதியில் விரித்துரைக்கப் பெற்று

酸_链霄 Gff领了。

தத்துவத்தின் உட்பொருள்' எனவும் பெண் ஆண் அலியென்று பேச்சுக் கடந்த பெருவெளி' எனவும் சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கட் சொல்லாய்ப் பரந்த சுடரொளி' எனவும் தாமேயவாறு சமய முதற்பொருளுந்-தாமேய வாறு தழைக்கின் ருர்’ எனவும் உருவுபலகொண்டொருவராய் தின் ருச்-உருவ: பலவாம் ஒருவர்' எனவும் இவ்வந்தாதியில் வரும் தொடர்கள் சிவநெறிச் செல்வர்களாற் போற்றிவழிபடப்