பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706

பன்னிரு திருமுறை வரலாறு


தாமென்ன நாமென்னவேறில்லை தத்துறவில் தாமென்னை வேருத் தனித்திருந்து-தா மென் கழிப்பாலை சேருங் கறைமிடற்ருர் என்னே கழிப்பாலை சேருங் கடன். எனவரும் பாடலாகும். மென் கழியாகிய கரும்பின் சாறு போன்றினிக்கும் பாலைப்பண்ணினைப் பாடவல்ல நஞ்சக் கறையொடு விளங்கும் திருமிடற்றினையுடைய இறைவர், கடவுளாகிய தாமென்றும் உயிர்களாகிய நாமென்றும் இருதிறமாகப் பிரித்துரையாதபடி நம்முடன் பிரிவறக் கலந்திருப்பவராயினும் வருத்தமில்லாத தாம் தம்மைக் காதலித்து வருந்துபவளாகிய எளியேனைத் தனித்திருந்து வருந்தச்செய்து தாம் மட்டும் வேருகப்பிரிந்து திருக்கழிப் பாலை யெனும் திருத்தலத்தைச் சேர்ந்து இனிதமர்ந்து இருத்தல் முறையாதல் எவ்வாறு என்பது இதன் பொருள். மென் கழியென்றது. மெல்லிய கழையாகிய கரும்பினை பாலை - பாலையென்னும் பெயருடைய பண். ஈண்டு கருப்பஞ்சாறு போன்று இனிக்கும் பாலைப் பண் என்றது இறைவன் பாடிய சாமவேதமாகிய இன் னிசையினை. * பாலையாழ்ப் பாட்டு கந்தான் ' &T 6\!" ஆளுடைய பிள்ளையாரும், பாடினர் சாமவேதம்’ என ஆளுடைய அரசரும் இவ்வின்னிசையினைக் குறிப்பிடுதல் காணலாம். இறைவன் திருமிடறு பாலையாழாகிய இன் னிசையும் நஞ்சக்கறையும் பொருந்தி விளங்கும் இயல்பினை யாழ்கெழு மணிமிடற் றந்தணன் ' எனவரும் அகநானூற் றுக் கடவுள் வாழ்த்தால் அறியலாம்.

பரண தேவராகிய நூலாசிரியர் தம் நெஞ்சத்திற்கு அறிவுறுத்துவதாக அமைந்தது,

கரியார் தாஞ் சேருங் கலைமறிகைக் கொண்டே கரியார் தாஞ் சேருங் கவாலி - கரியாகி

நின்ற கழிப்பாலை சேரும் பிரான் நாமம் நின்ற கழிப்பாலை சேர்.

எனவரும் திருப்பாட்டாகும். உள்ளத்தே வஞ்சனையுடைய ராகிய தாருகாவனத்து முனிவர்கள் தாமென்னும் அகந்தை யினுற் புரிந்த அபிசார வேள்வியிலிருந்து தோன் றித் தன் பாற் சேர்ந்த கலைமான் கன் றினைத் தன் கையிலேந்திக் கரிய திருமேனியுடைய திருமால் தன்னொரு பாகத்திலே சேரப்பெற்று விளங்கும் கபாலியென்ற திருப்பெயரினை