பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரண தே ைநாயஞர் 707

யுடையவனும் மகாசங்கார காலத்தே உலகப் பொருள் களெல்லாம் தீந்து கரியாகிய பெருஞ் சுடுகாட்டகத்தே சேர்ந்து ஆடல்புரியும் பெருமானும் ஆகிய இறைவன் புகழுடன் நிலைபெற எழுந்தருளிய திருக்கழிப் பாலையெனுந் திருப்பதியினை நெஞ்சமே இடைவிடாது நினைந்து போற்று வாயாக என்பது இதன் பொருளாகும். இதன்கண் * கரியாகி நின்ற கழிப்பாலை யென்றது, மகா சங்கார காலத்தே எல்லாவுலகங்களும் வெந்து நீருகிய பேரீமப் புறங்காட்டினை. இவ்வாறு இருபொருள் பட ஊர்ப் பெயர்களை எடுத்துரைத்துப் போற்றும் பாடல்கள் இத்திரு வந்தாதியில் இன்னும் பலவுள்ளன.

செல்லுமளவுஞ் சிதையாமற் சிந்திமின் s

எனவரும் இவ்வந்தாதியின் 70-ஆம் பாடல் செல்லு மளவுஞ் செலுத்துமின் சிந்தையை (2.108) என்ற திருமந் திரப் பாடலை யடியொற்றியமைந்ததாகும். நானுடை மாடே யென் ஞானச் சுடர் விளக்கே எனவும் ஆமாத்துார் அம்மானே எனவும் புகலூரா புண்ணியனே எனவும் மறைக்காடு சேரும் மணுளர் ' எனவும் இறைவனைக் குறித்து இவ்வந்தாதியில் வழங்கப்பெற்ற தொடர்கள் " நானுடை மாடெனவே நன்மைகொளும்பரனே (சுந்தரர்) எனவும் ஞானச்சுடர் விளக்காய் நின்ருன் தன்னை (நாவுக்கரசர்) எனவும் ஆமாத்து ரம்மானைக் காணுத கண்னெல்லாங் காணுத கண்களே (திருஞானசம்பந்தர்) எனவும்,

• பூம்புகலூர் மேவிய புண்ணியனே மறைக் காட்டுறையும் மணுளன்ருனே (திருநாவுக்கரசர்) எனவும் வரும் தேவாரத் திருப்பதிகங் களின் தொடர் மொழிகளை நினைவுறுத்துவனவாக அமைந் துள்ளன. இவ்வந்தாதியில்,

ஆய்ந்துன்றன் பாதம் அடைய வருமென்மேல் ஆய்ந்தென்றன் பாச மலமறுத் தாய்ந்துன்றன் பாலணையச் செய்த பரமா பரமேட்டி பாலணையச் செய்தாய் பரம். எனவரும் அறுபதாம் பாடல்,

பல்லோருங்கான என்றன் பசுபாச மறுத்தானை '

எனவும்,