பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710

பன்னிரு திருமுறை வரலாறு


ளத்திலும் நிலைபெற்றுத் தோன்றும் ஆதிமுதல்வகிைய நினது திருவடி நீழல், உடல்தேய்ந்து நின் னைத் தஞ்சம் புகுந்த திங்கட்செல்வனை அளிக்கத் தக்கன அல்லவோ? அங்ங்னமாகவும் ஒளிதிகழும் வெள்ளிய சங்கினைப்போலும் வெண்ணிற மலர்களின் நிறத்தையுடையதாய் நிலவொளி யைப் பரப்பிய திங்கட் கண்ணியை நின் திருமுடிமேல் அணிந்தது எக்காரணத்தால் ? எனச் சிவபெருமானை நோக்கி வினவும் நிலையில் அமைந்தது, முதல்வன் வகுத்த மதலே மாடத் திடவரை யூன்றிய கடவுட் பாண்டிற் புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர் எறிவளி யெடுப்பினுஞ் சிறு நடுக் குரு நின் அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை இலங்குவளைத் தனிப் போது விரித்த அலங்குகதி ரொலியல் நீ அணிந்த தென் மாறே. எனவரும் இத்திரு மும்மணிக் கோவையின் முதற் பாட லாகும். " எம்பெருமாகிைய நீ நின்னைச் சரணடைந் தார்க்கு நின் திருவடி நீழல் தந்து அருள் புரிதலே முறை யாகவும் நின்னைத் தஞ்சம் புகுந்த வெண்மதிக்குத் திருவடி நீழல் அருளாது அம்மதியை நின்முடிமிசை வைத்தது எது கருதி" என இளம் பெருமானடிகள் சிவபெருமான நோக்கி வினவிய வி,ை தேய் மதியளுகிய சந்திரன் தன் திருவடியால் முன்னுெரு காலத்தில் தேய்க்கப்பட்டு வருந்தியவளுதலின் தன் திருவடி அவனுக்கு மேலும் அச் சத்தைத் தரும் என்ற அருட் குறிப்பின் காரணமாகவே சிவபெருமான் சந்திரனைத் தன் முடிமிசை வைத்தருளினன் என்ற குறிப்பினை இனிது புலப்படுத்தல் காண்க.

சிவபெருமானது தாழ்சடை குளிர்ந்த கங்கை நீரைத் தன்பாற் கொண்டிருந்தும் நெருப்புப் போலும் செந்நிற முடையதா யொளிர்தலும், அப்பெருமானது கண்டம் ஆல கால நஞ்சினைத் தன் பால் அடக்கியிருந்தும் வானேரமிழ் தினை யொத்துக் கண்டோரது பிணி நீக்கிச் சாவா மூவாப் பெருவாழ்வு தந்து திகழ்தலும், அவ்விறைவனது திருவடி வம் சுடர் விட்டெரியுந் தீயை யொத்த தோற்றமுடைய தாயிருந்தும் தளிரினுந் தண்மையுடையதாய்க் கண்டோர் கண்களுக்குக் குளிர்ச்சி தந்து விளங்குதலும், இறைவ லுடைய திருவடி கூற்றுவனைச் சினந்துதைத்த பெரு வன்மையுடையதாயினும் செந்தாமரை மலரையும் கீழ்ப்