பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

712

பன்னிரு திருமுறை வரலாறு


கடும்பகல் நட்ட மாடிக் கையிலோர் கபாலமேந்தி இடும்பலிக் கில்லந் தோறும் உழிதரும் இறைவனிரே நெடும் பொறைமலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தற் கொடுங்குழை புகுந்த அன்றுங் கோவணம் அரையதேயோ,

எனவரும் திருநாவுக்கரசர் திருப்பாடற் பொருளை அடி யொற்றி யமைந்ததாகும். இவ்வாறே இத்திரு மும்மணிக் கோவையில்,

இவளப் பணிமால் இமையத் தனங்குகற் றைச்சடைமேல் அவளப்புத் தேளிர் உலகிற்கரசி அதுகொண்டென்ன எவளுக்கு நீநல்ல தியாரைமுன் னெய்திற்றெற் றேயிதுகாண் தவளப் பொடிச் செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே, எனவரும் பாடலும்,

ஒருத்திதன் தலைச்சென் ருளேக் கரந்திட்டான் உலக மேத்த ஒருத்திக்கு நல்லகிை மறுப்படுத் தொளித்து மீண்டே ஒருத்தியைப் பாகம் வைத்தான் உணர்வில்ை ஐயமுண்ணி ஒருத்திக்கு நல்லனல்லன் ஒற்றியூருடைய கோவே,

என்ற திருநேரிசைப் பாடற்பொருளைப் பின்பற்றி யமைந் திருத்தல் காணலாம்.

சிவவழிபாடு இத்தமிழகத்துத் தோன்றி நிலைபெற்ற தெய்வவழிபாடுகளெல்லாவற்ருேடும் நெருங்கிய தொடர்பு உடையதாய்த் தமிழரனைவர்க்கும் பொதுவாகிய வழிபாடு என்பதனை,

வேந்துக்க மாக்கடற் சூரன்முன்னுள்பட வென்றிதந்த சேந்தற்குத்தாதை, இவ் வையமளந் தெய்வத்திகிரி ஏந்தற்கு மைத்துனத் தோழன், இன்றேன் மொழி வள்ளி

யென்னுங் கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம்மால்விடைக்

கொற்றவனே . எனவும்,

கொற்றத் துப்பின் ஒற்றை யீன்ற துணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப் பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுந’ எனவும் வரும் பாடற்ருெடர்களால் இவ்வாசிரியர் சுவை பெற விளக்கியதிறம் உளங்கொளத்தக்கதாகும்.

இனி, இளம்பெருமானடிகள் என்பார் சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளாக இருத்தல் கூடுமோ