பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிராவடிகள் 了重懿

என ஐயுறுவாருமுளர். கடைச்சங்க காலத்திலில்லாத கட்டளைக்கலித்துறையாப்பும் விநாயகர் வழிபாடும் இவர் பாடிய திருமும்மணிக்கோவையில் இடம் பெற்றிருத்கலா லும் கி. பி. ஒன்பது பத்தாம் நூற்ருண்டுகளில் வாழ்ந்த ஆசிரியர்கள் பாடிய பிரபந்தங்களுக்கிடையே இவர் பாடிய மும்மணிக்கோவை முறைப்படுத்தப் பட்டிருப்பதாலும் இதனைப்பாடிய இளம்பெருமானடிகள் இளங்கோவடிகள் அல்லர் என்பதும் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டினிறுதியும் பத்தாம் நூற்ருண்டின் தொடக்கமுமாகிய காலப்பகுதியில் வாழ்ந்த திருவருட்செல்வர் இளம்பெருமானடிகள் என் பதும் நன்கு தெளியப்படும்,

10. அதிராவடிகள்

பதிளுெராந் திருமுறையில் இருபத்தைந்தாம் பனுவல் ஆகத் தொகுக்கப்பெற்றுள்ள மூத்த பிள்ளையார் திருமும் மணிக்கோவையைப் பாடியவர் அதிராவடிகளாவர். கல்வி கேள்விகளில் வல்லவராகிய இவ்வாசிரியர் தனக்குவமை இல்லாதவனகிய இறைவன் திருவடிகளே இடைவிடாது நினைத்து மனக்கவலை மாற்றியவராதலின் வினைத்துன்பங் களைக்கண்டு துளங்காத சிந்தையுடைய இவரை அதிரா வடிகளென்ற பெயரால் ஆன்ருேர் குறித்துப் போற்றுவார் ஆயினர். அதிர்ச்சி - நடுக்கம். அதிரா அடிகள் - துளக்க மில்லாத சிந்தையினராகிய பெரியார். எதிர்காலத்தில் வரக்கடவதாகிய இடையூற்றினை முன்னரே அறிந்து தடுக்கவல்ல நல்ல அறிவினையுடையார்க்கு அவர் நடுங்கும்படி வருவதொரு துன்பமும் இல்லையென்பார்,

எதிர தாக் காக்கும் அறிவிஞர்க் கில்லை

அதிர வருவதோர் நோய் '

என்ருர் திருவள்ளுவர். தெய்வப்புலவர் அருளிய இப் பொய்யாமொழியின் வண்ணம் இடையூறு நீக்குவோராகிய மூத்தபிள்ளையாரைப் பணிந்து பின்வரக் கடவதுன்பங்களை முன்னறிந்து காக்கும் நிலையில் அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை யென்னும் மும்மணிகளால் இயன்ற மும்மணிக்கோவை யென்னும் பாமாலையை மூத்த பிள்ளையார்க்கு அணிந்த இப்புலவர் பெருமானை அதிரா

1. தமிழ்ப்பொழில் 17-ம் துனர் பக்கம் 72. ஒரு திருவருட்பர உரை யென்ற கட்டுரை நோக்குக.