பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714

பன்னிரு திருமுறை வரலாறு


வடிகளென அழைத்தமை பெரிதும் பொருத்தமுடையதே யாம். இவ்வாசிரியர் பிறந்த ஊர் குலம் முதலியன இவை எனத் தெரிந்துகொள்ள இயலவில்லை. இவ்வாசிரியர் வாழ்ந்த காலம் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதியும் பத்தாம் நூற்ருண்டின் தொடக்கமுமானெக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை முப்பது பாடல்களால் இயன்றுளது. இந்நூலின் ஏடுகள் சிதைவு உற்றமையால் இதன் கண் 24 முதல் 30 வரையுள்ள பாடல் கள் ஏழும் கிடைக்கவில்லை. கிடைத்த பாடல்களிலும் சில தொடர்கள் பொருள் விளங்கா நிலையிற் சிதைந்துள்ளன.

காமனைக்காய்ந்த கடவுளாகிய சிவபெருமான் பெற் றருளிய பதல்வர் யானைமுகக் கடவுளாகிய மூத்தபிள்ளை யா சாவர். அவருடைய திருவடித்துணையின்றி உயிர்கட்கு வேறு துணையில்லை. தன்னை அனபினுல் வழிபடும் மெய் யடியார்களின் பிறவிப்பிணியைப் போக்கவல்லார் அவர். அவருடைய திருவடியைச் சிந்தித்து வாழ்வார்க்கு மனக் கவலையில்லை. யாம் மூத்தபிள்ளையாருடைய திருவடியை இறுகப்பற்றினேமாதலால் மனக் கவலையால் மதிமயங்கும் இயல்புடையேமல்லேம் என அதிராவடிகள் இத் திருமும் மணிக்கோவையிற் கூறுங்கருத்துக்கள் மூத்தபிள்ளையார் வழிபாட்டினல் மக்கள் அடைதற்குரிய பெருநலங்களை அறிவுறுத்துவனவாகும்.

மூத்தபிள்ளையார் இருகைகளையுஞ் சேர்த்துத் தட்டிச்

சப்பாணி கொட்டுதலும், திருமுகம் அசையச் செங்கீரை யாடுதலும் ஆகிய பிள்ளை விளையாட்டினை மேற்கொண்டு உலகவுயிர்களுக்கு இன்பஞ்செய்யும் திறத்தை,

நிலந்துளங்க மேருத் துளங்க நெடுவான்

தலந்துளங்கச் சப்பாணிகொட்டும் - கலந்துளங்கொள்

காமாரி யீன்ற கருங்கைக் கடதடத்து

மாமாரி யீன்ற மணி.

எனவும்,

இக்கயங்கொள் மூவலயஞ் சூழேழ் தடவரைகள் திக்கயங்கள் பேர்ந்தாடச் செங்கீரை - புக்கியங்கு தேனுட வண்டாடச் செங்கீரை யாடின்றே வானுடன் பெற்ற வரை,