பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716

பன்னிரு திருமுறை வரலாறு


சிந்தையும் மொழியும் செல்லாத நிலையில் அப்பாற் பட்டுத் திகழ்தலும், ஞாயிறு திங்கள் தீயென்பவற்றைக் கண்களாகக் கொண்டு உலகத்திற்கு விளக்கந் தருதலும், கல்லால் நீழலில் முனிவர் நால்வர்க்கு அறமுதலாகிய அருமறைப் பொருளைத் தெளிய அறிவுறுத்தலும் ஆகிய சிவபெருமானுக்குரிய இயல்புகளை அவர் பெற்றருளிய மூத்த பிள்ளையார்க்கு இயைத்துரைப்பதாக அமைந்தது,

மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே கழிய வருபொருளே கண்ணே - தெழிய கலாலயனே எங்கள் கணபதியே நின்னை அலாதையனே சூழாதென் அன்பு. என்ற பாடலாகும், சிவபெருமானும் அவர் பெற்றருளிய மூத்த பிள்ளையாரும் பொருளால் ஒருவராதலேயன்றிப் பண்பு உறுப்பு செயல் என்பவற்ருலும் ஒருவராயுள்ள இயைபின இத் திருப்பாடல் அறிவுறுத்தல் காணலாம். இவ்வாறே இம்மும் மணிக்கோவையின் பத்தாம் பாடலும் மஞ்சேறு கயிலை மலைகிழவோயே என விநாயகப் பெருமானைக் கயிலை மலையில் வீற்றிருக்கும் கடவுளாகப் போற்றி அழைக்கின்றது. இக்குறிப்புக்களை ஊன்றி நோக்குங்கால் சிவபெருமானும் மூத்தபிள்ளையாரும் ஒரு பரம்பொருளே யென்றவுண்மையை யுணர்ந்து வழிபட்ட திருவருட்செல்வர் அதிராவடிகளென்பது நன்கு விளங்கும். சிவபெருமான் தன் கையிலுள்ளதோர் மாங்கனியை மூவுலகங்களையும் விரைவிற் சுற்றி வருவார்க்குத் தருவ தாகக் கூறினரென்றும், அதனைக் கேட்ட முருகப்பெருமான் மயில் மீதிவர்ந்து மூவுலகங்களையும் விரைவிற் சுற்றிவரச் சென்றனரென்றும், அந்நிலையில் விநாயகப் பெருமான் எல்லா வுலகமுமாய் விளங்கும் தம் தந்தையாகிய சிவபெருமானை வலம் வந்து அம் மாங்கனியை எளிதிற் பெற்றனரென்றும் வழங்கும் புராண கதையின,

சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றணி நெடுவேற் சேய்மூ வுலகம் வலம்வர ஏய கொன்றையம் படலந் துன்று சடைக் கிடந்த ஓங்கிருந்தாதையை வளாஅய் மாங்கனி அள்ளற் றீஞ்சுவை யருந்திய வள்ளற் கிங்கென் மனங்கனிந்திடுமே. எனவரும் பாடலில் இந்நூலாசிரியர் குறிப்பிட்டுப் போற்றி யுள்ளார். இறைவன் திரிபுரத்தை அழிக்கச் சென்ற