பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 717

பொழுது விநாயகப் பெருமான் துணைபுரிந்த செய்தி இம் மும்மணிக்கோவையின் ஒன்பதாம் பாடலிற் குறிக்கப் பெற்றுளது. விநாயகப் பெருமானது திருமேனியின் தோற்றத்தைக் குறித்து இவ்வாசிரியர் புனைந்துரைப்பன

கற்போர்க்குப் பெரிதும் சுவைபயப்பனவாம்.

10. திருவெண்காட்டடிகள்

திருவெண்காட்டடிகளென்பார் பதினுெராந் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவராவர். இவர் சோழ நாட்டின் கடற்றுறைப்பட்டினமாகிய காவிரிப்பூம் பட்டினத்திற் பிறந்தமையாற் பட்டினத்துப்பிள்ளையாரெனவும் வழங்கப் பெறுவர். இவர்க்குப் பெற்ருேர் இட்ட பெயர் திருவெண் காடர் என்பது. செல்வக் குடும்பத்திற் பிறந்து மனைத்தக்க மாண்புடைய மங்கையை மணந்து மனே வாழ்க்கை நடத்திய இப்பெரியார், பிறவிநோய்க்குக் காரணமாகிய அவாவை அறவே நீத்துத் துறவறத்தை மேற்கொண்டமையால் திருவெண் காட்டடிகளெனவும் பட்டினத்தடிகளெனவும் அடிகள் என்ற சொல்லாற் போற்றப் பெறுவாராயினர். அடிகள் என்ற இச்சொல் துறவறநெறியில் நின்ருர்க்கே சிறப்பாக வுரியதென்பது "குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த, குடக்கோச் சேரல் இளங்கோவடிகட்கு" எனவரும் சிலப்பதிகாரப் பதிகத் தொடராலும் "அடிகள் என்றது துறத்தலான்” என அடியார்க்கு நல்லார் எழுதிய விளக்கவுரையாலும் நன்கு தெளியப்படும்.

பதினெராந் திருமுறையுள் திருவெண்காட்டடிகள் இயற்றியனவாகக் கோயில் நான் மணிமாலை, திருக்கழு மலமும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திரு வொற்றியூர் ஒருபா ஒருபது என ஐந்து பிரபந்தங்கள் சேர்க்கப் பெற்றுள்ளன. இப்பனுவல்கள் யாவும் சொற் செறிவும் பொருட்பொலிவு முடையனவாய்க் கற்பார்க்கு நவிலுந்தோறும் சுவைபயப்பனவாக வுள்ளன. இப் பிரபந்தங்களை அன்றி அடிகள் பாடியனவாக வேறுபல தனிப்பாடல்கள் பட்டினத்துப்பிள்ளையார் பாடற் றிரட்டு என்ற பெயருடன் வழங்குகின்றன. பதினுெராந் திருமுறையில் திருவெண்காட்டடிகள் பாடிய பிரபந்தங் களும் மேற்குறித்த பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்