பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718

பன்னிரு திருமுறை வரலாறு


றிரட்டிலுள்ள பாடல்களும் சொல்நடை பொருளமைதி என்பவற்ருற் பெரிதும் மாறுபட்டுள்ளன. பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டில் ஏகரித்து, ஒப்பாரி, ஒய்யாரம், கலங்கிறண்டா, சவ்வாது, சலவை, சொகுசு, தாவாரம், பல்லாக்கு, பொக்கசம். பொம்மலாட்டம், போச்சுதடி, மாய்கை, மாங்கிஷம், முழித்திருந்து, வங்கிஷம் வேட்டி, வேலை மினக்கிட்டு முதலிய பிற்காலச் சொற்களும் பிழைபட்ட சொல்லுருவங்களாகிய இழிசினர் வழக்குச் சொற்களும் இடம்பெற்றுள்ளன. பதினெராந் திரு முறையில் சேர்க்கப்பெற்றுள்ள திருவெண்காட்டடிகள் பிரபந்தங்கள் ஐந்தும் சங்கச் சான் ருேர் மேற்கொண்ட தூய செந்தமிழ் நடையில் அமைந்துள்ளன. எனவே பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற் றிரட்டு ' என்ற பெயருடன் வழங்கும் பாடற்ருெகுதி பதினெராந் திருமுறையாசிரியருள் ஒருவராகிய திருவெண்காட்டடிகள் வாக்கல்ல என்பதும் இத்திருப்பாடற்றிரட்டிலுள்ள பாடல் களைப் பாடிய சான்ருேர் திருவெண்காட்டடிகளுக்கு நெடுங்காலம் பிற்பட்டுத் தோன் றிய வேருெருவரென்பதும் நன்கு துணியப்படும்.

திருவெண்காட்டடிகளது உண்மை வரலாற்றினை அறிந்துகொள்ளுதற்குரிய சான்றுகள் கிடைக்கவில்லை. அடிகளது வரலாற்றை விரித்துரைக்கும் நோக்கத்துடன் பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல் பட்டினத்துப்பிள்ளையார் புராணம் என்பது. பட்டினத்தடிகள் மரபினராய்த்தில்லையில் வாழ்ந்த வணிகர்களது வேண்டுகோளின்படி இப் புராணத்தைப்பாடியதாக இந்நூலாசிரியர் கூறுகின்ருர். இவ்வாசிரியரது பெயர் தெரியவில்லை. பட்டினத்தடிகள் வரலாறுகளாகத் தம் காலத்தில் வழங்கிய செய்திகளை இவ்வாசிரியர் இப்புராணத்தில் தொகுத்துக்கூறியுள்ளார்.

காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குடும்பத்திலே திருவெண்காடர் அவதரித்தார். அவர் வாணிகத்தாற் பெரும் பொருளிட்டிச் சிவனடியார்களை உபசரித்து வந்தார். திருவிடைமருதூரில் எழுந்தருளிய சிவபெருமான் தன்னை அன்பினுல் வழிபாடுசெய்யும் சிவசருமரது வறுமையைப் போக்கி அருள் புரியக்கருதி மருதவாணர் என்னும் பார்ப்பனப் பிரமசாரியாய் வந்து தன்னை விற்றுப் பொருள்