பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722

பன்னிரு திருமுறை வரலாறு


இனி, திருவெண்காட்டடிகள் சரித்திரமெனப் பிற் காலத்தார் பலரும் வழங்கிவரும் கதை மேற்காட்டிய பட்டினத்தடிகள் புராணத்திற்குச் சிலவிடங்களில் மாறு பட்டிருத்தலைக் காணலாம்.

மண்ணுலகிலுள்ள திருத்தலங்கள் பலவற்றிலும் அம்மையப்பராகிய இறைவனது திருக்கோலத்தைக் கண்டு வழிப்ட எண்ணின்ை குபேரன். செல்வத்தோழனுகிய அவனது விருப்பததை நிறைவேற்றத் திருவுளங்கொண்ட இறைவர் உமையம்மையாருடன் விடைமீதமர்ந்து காசி, காளத்தி, காஞ்சி, தில்லை முதலிய திருப்பதிகளில் எழுந் தருளிக் கயிலைக்காட்சியை வழங்கித் திருவெண்காட்டிற்கு எழுந்தருளினர். திருவெண்காட்டில் தங்கி இறைவனை வழிபாடுபுரியுங் குபேரன் அதனருகேயுள்ள காவிரிப்பூம் பட்டினத்தின் இயற்கையெழிலை யும் செல்வப்பொலிவையும் கண் டு அங்குப் பலநாள் தங்கியிருக்க விரும்பினன். நீ காவிரிப்பூம் பட்டினத்தில் விருப்பம் வைத்தமையால் அங்குப் பிறப்பாயாக' என இறைவர் பணித்தருளினர். அம்மொழிகேட்டு மனங்கலங்கிய குபேரன் சிறியேன் மானிடப்பிறவியால் மதிமயங்குங் காலத்து அடியேனைத் தடுத்தாட்கொண்டு அருள் புரிதல் வேண்டும் எனச் சிவபெருமானைப் பணிந்து வேண்டினன். இறைவரும் அங்ங்னமே அருள்புரிவதாகத் திருவாய்மலர்ந்து திருக் கயிலைக்கு எழுந்தருளினர்.

காவிரிப்பூம் பட்டினத்திற் சிவநேசர் என்ற வணிகர் ஞானகலாம்பை யென்னும் மங்கையை மணந்து மனையறம் நிகழ்த்திவந்தனர். ஆண்மகவின்றி வருந்தும் அவ்விருவ ாது குறையினைப்போக்கக்கருதிய இறைi. குபேரனை அவ் இருவர்க்கும் புதல்வகைப் பிறப்பித்தருளினர். திருவெண் காடர் திருவருளாற் பிறந்த குழந்தைக்குத் திருவெண் காடரெனப் பெயரிட்டார்கள். வெண்காடர்க்கு ஐந்து வயது நிரம்பும் நிலையில் அவர்தம் தந்தையாராகிய சிவநேசர் இறைவனடிசேர்ந்தார். அன்னயார் திருவெண் காடரைப் பள்ளியிலமர்த்திக் கல்விபயில், செய்தார். கல்வி கேள்விகளில் வல்ல திருவெண்காடர் கற்றதனுலாய பயன் கடவுளடிதொழுதுய்தலே யெனத் தெளிந்தார், ஒருநாள் சிவபெருமான் வெண்காடர் கன வில் அந்தணராகத்