பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/739

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண் காட்டடிகள் 723

தோன்றி நாளை திருவெண்காடு சென்று இறைவனை வழிபடுக. அங்கு வேதியரொருவர் வந்து நினக்குச் சிவ தீக்கை செய்வார் ' எனச் சொல்லி மறைந்தனர். வெண் காடரும் தாம் கண்ட கனவை அன்னை யாருக்குச் சொல்லி மறுநாட்காலை திருவெண் காட்டை யடைந்தார். அந் நிலையில் கனவில் தோன்றிய அந்தணரே அங்கு வந்து திருவெண்காடர்க்குச் சிவதீக்கை செய்து தாம் கொணர்ந்த சம்புடத்தை அவர் கையில் தந்தருளினர், அச் சம்புடத்தை வெண்காடர் வாங்கிய அளவில் அது, தானே திறந்து கொண் டது. அதனுள்ளே சிவலிங்கத் திருமேனியும் விநாயகர் திருவுருவும் இருத்தலைக்கண்ட திருவெண்காடர் ஆசிரியர் கற்பித்தவண்ணம் அத்திருவுருவங்களை நாள் தோறும் பூசித்து வருவாராயினர். இறைவன் வெண்காடர் மாளிகையில் பொன்னிைெடு நவமணிகள் பொலிந்து விளங்கச் செய்தருளினுன் திருவெண்காடர் சிவகலை யென்னும் நங்கையை மணந்து மனையறம் நிகழ்த்தி வருங்கால் மகப்பேறின்றி வருந்தி இறைவனேப் பூசித்து வந்தார்.

திருவிடைமருதூரில் மகாலிங்கப் பெருமானை வழிபடும் சிவசருமரென்பார் சுசீலையம்மையை மணந்து அரன் பூசையிலும் அடியார்க்குத் திருவமுதளித்தலிலும் தம்மிடத் துள்ள பொருளைச் செலவிட்டுவந்தார். வறுமையால் வருந்தும் அவ்வேதியரது வருத்தத்தை நீக்கத் திருவுளங் கொண்ட இடைமருதீசன் அவரது கனவில் தோன்றி 'அன்புமிக்கீர் நமது தீர்த்தக்கரையிலுள்ள வில்வமரத்து அடியில் நாமே ஒரு குழந்தையாக வந்துள்ளோம். நீவிர் அக்குழந்தையை எடுத்துக்கொண்டு காவிரிப்பூம்பட்டி ன த்தை யடைந்து வெண் காடரென்னும் வணிகரிடங் கொடுத்து அக்குழந்தையளவு நிறையுள்ள பொன்னைப் பெற்று உமது வறுமையைத் தவிர்ப்பீராக என்று கூறி மறைந்தார். அம்மொழியினைக் கேட்ட சிவசருமர் மனைவி யுடன் வில்வமரத்தடியை யடைந்து குழந்தையைக் கண்டு எடுத்து மகிழ்ந்தார். அவ்விருவரும் குழந்தையை விற்க மனமிலராய் வீடுதிரும்ப எண்ணினராயினும் இறைவன் அருளால் வழிதவறிச்சென்று முடிவில் காவிரிப்பூம்பட்டி னத்தை யடைந்தனர். அவர்களது வரவினை இறைவர் கனவிடைச் சென்று அறிவிக்க வுணர்ந்த திருவெண்காடர்