பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728

பன்னிரு திருமுறை வரலாறு


எந்தத் தலத்தில் தித்திக்குமோ அந்தத்தலமே உனக்குச் சிவகதியையளிக்குந்தலம் எனக் கூறி மறைந்தருளினர். ன்ன்றும், அவர் தந்த நாணற்கரும்பினைக் கைக்கொண்ட அடிகள், தாம் சென்றதலங்கள் தோறும் அதனைமென்று சுவைபார்த்து முடிவில் திருவொற்றியூரை யடைந்த பொழுது அது தித்தித்தமையால் அவ்வூரில் தங்கியிருந்து கடற்கரையிற் சிவலிங்கமாயினரென்றும் புலவர் புராணம் கூறுகின்றது. இக்கூற்றிற்கேற்பப் பட்டினத்தடிகளின் திருவுருவத்தினை வரைந்தோர் அடிகள் திருக்கரத்திற் கரும்பினைத்தந்து எழுதியுள்ளார்கள். இனி, திருவெண் காட்டடிகள் திருவண்ணுமலையை யடைந்தபொழுது அங்கெதிர்ப்பட்ட உருத்திரகணிகை யொருத்தியை விரும்பி அழைத்தனரென்றும், அவள் மறுத்து ஓடிய நிலையில் தம்பால் வெளிப்பட்ட சுக்கிலத்தை இலக்கலத்திற் பெய்து விட்டு அடிகள் யோக நிலையில் அமர்ந்திருந்தாரென்றும், பின் அவள் இசைந்துவந்தபொழுது அடிகள் குறிப்பின்படி இலக்கலத்திற் பெய்துவைத்திருந்ததனை விழுங்கிக் கருக் கொண்டு திருப்பு கழாசிரியராகிய அருணகிரிநாதரைப் பெற்ருளென்றும் ஒரு கதை வழங்குகின்றது.

இங்கெடுத்துக்காட்டிய இக்கதைகளுட் பல பிற் காலத்தவரால் தம்மனம் போனவாறு புனைந்துரைக்கப் பட்டனவாகும்.

“ பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல்

ஆரும் துறக்கை யரிதரிது" எனத் தாயுமானப் பெருந்தகையாரால் வியந்து போற்றப் பெற்ற தூய துறவறச் செல்வராகிய பட்டினத் தடிகள் கணிகையொருத்தியைக் கண்டு கழிகாமுகராகி உள்ளத்துறுதியை யிழந்தாரெனக் கூறும் இக்கதையினை அறிஞர் அருவருத்தொதுக்குவர் என்பது திண்ணம். அன்றியும் பட்டினத்தடிகள் கி. பி. பத்தாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் இருந்தவர். திருப்புகழாசிரியராகிய அருணகிரிநாதரோ கி. பி. பதினைந்தாம் நூற்ருண்டில் வாழ்ந்தவர். இவ்விருவர் வாழ்ந்தகாலப் பகுதிக்கிடையே நானூருண்டுகள் இடையிட்டுள்ளன. இந்நிலையினை யுணர்வோர் மேற்காட்டிய கதை வரலாற்று முறைக்கு மாறுபட்டதென்பதனை நன்கு தெளிந்து கொள்வார்கள்.