பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

730

பன்னிரு திருமுறை வரலாறு


புதுவிரை யலங்கல் குழல்மிசைப் பொலியும் அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும் சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில் அறுசுவை யடிசில் வறிதினி தருந்தாது ஆடினர் க் கென்றும் பாடினர்க் கென்றும் வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும் பூசுவன பூசியும் புனை வன புனைந்தும் து சு நல்லன தொடையிற் சேர்த்தியும் ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்

மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந் திவ்வகை யிருந்தோம் ஆயினும் அல் வகை மந்திர எழுத்தைந்தும் வாயிடைமறவாது சிந்தை நின்வழிச் செலுத்தலின் அந்த முத்தியும் இழந்திலம் தமுல்வ ' எனத் திருவி.ை மருதூர் மும்மணிக் கோவையில் திருவெண்காட்டடிகள் விரித்துக் கூறியுள்ளார். அளவின் மிக்க பெருஞ் செல்வமுடையாரை உலக மக்கள் குபேரர் எனப் பாராட்டிப் போற்றுதலை இன்றும் காண்கின் ருேம். நிதியின் கிழவனகிய அளகை வேந்தனைப் போன்று வளமிகப்பெற்ற திருவெண்காட்டடிகளைப் பின்வந்தோர் குபேரனது அவதாரமென்றே புனைந்துரைத்துள்ளார்கள். அன்னேர் கூற்றினை உபசாரமெனக் கொள்வதல்லது உண்மை வரலாருகக் கொள்ளுதற்கில்லை.

அடிகட்குப் பெற்ருேர் இட்ட பெயர் வெண்காடன் என்பதாகும். அடிகள் தமக்கு எளிவந்து அருள்புரிந்த இறைவனை நோக்கி வெண்காடனென்னுந் தரத்தினு மாயது நின்னடியாந் தெய்வத் தாமரையே எனத் திருவிடைமருதுரர் மும்மணிக் கோவையின் இறுதிப் பாடலில் உளமுருகிப் போற்றியுள்ளார். வெண்காடனுகிய என் தாத்திலும் நின் திருவடித்தாமரை எளிவந்து அருள் புரிந்தமைக்கு எளியேன் என்ன கைம்மாறு செய்ய வல்லேன்' என மருதப்பிரானை அடிகள் மகிழ்ந்து போற் றுதலால், அடிகளது பெயர் திருவெண்காடன் என்பது நன்கு புலனுதல் காண்க.

திருவெண்காடர் தரை வழியாகவும் கடல் வழியாகவும் பிறநாடுகட்குச் சென்று பெரும் பொருளை ஈட்டியவ ரென்பதும், தரை வழியாகச் செல்லுங்கால் கள் வர் முதலா யினரால் நேரும் துன்பங்களையும் கடல் வழியாகச்