பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732

பன்னிரு திருமுறை வரலாறு


மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்து இவ்வகை யிருந்தோம்’ எனத் திருவெண்காட்டடிகள் தம் வாழ்க்கையனுபவத்தினை விரித்துக் கூறினமை முன்னர் விளக்கப்பெற்றதாதலின் அடிகளுக்கு மைந்தரில்லையென ஒருதலையாகத் துணிந்து கூறுதற்கு இடமின்மையுணர்க.

உயிர்க்குயிராகிய சிவபெருமானே புறத்தே ஆசிரியத்

திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து மெய்ப்பொருளை அறிவுறுத்தித் திருவெண்காடரை ஆட்கொண்டருளினன் என்பது,

நானே பிறந்து பயன் படைத்தேனயன் நாரணனெங்

கோனே கெனத்தில்லையம்பலத்தே நின்று கூத்துகந்த

தேனே திருவுள்ளமாகி யென் தீமை யெல்லாமறுத்துத்

தானே புகுந்தடியேன் மனத்தேவந்து சந்திக்கவே.

எனவரும் கோயில் நான்மணிமாலைப் பாடலாலும்,

கரத்தினில் மாலவன் கண் கொண்டு நின்கழல் போற்ற நல்ல வரத்தினை யீயும் மருதவப்பா மதியொன்று மில்லேன் சிாத்தினு மாயென்றன் சிந்தையுளாகி வெண்காடனென்னுந் தரத்தினு மாயது நின்னடி யாந்தெய்வத் தாமரையே.

எனவரும் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையின் இறுதிச் செய்யுளாலும் நன்கு புலனுதல் காண்க.

திருவெண்காடர் துறவடைந்தமைக்குக் காதற்ற ஆசியும் வாராது காணுங் கடை வழிக்கே ' என்ற தொடர் எழுதப்பட்ட ஒலைச்சீட்டும் அதனுடன் இருந்த காதற்ற ஆசியுமே காரணமாயின எனக்கூறுங் கதை அவரது மன வியல்புக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. இத் தொடரே அவரைத் துறவடையத் தூண்டியிருக்குமாயின் இத்தொடர்ப் பொருளைத் தாம் பாடிய பதினுெராந் திரு முறைப் பனுவல்களில் யாண்டேனும் அடிகள் சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பர். இத்தொடர் அடிகள் திருவாக்காகிய பதினுெராந் திருமுறைப் பிரபந்தங்களில் எங்கும் குறிக்கப்படவில்லை. இத்தொடர்ப் பொருளுக்கு முரணுகச் செல்வம் நிறைந்த மனைவாழ்க்கையிலிருந்து கொண்டே திருவைந்தெழுத்தோதிச் சிவபெருமானை வழிபட்டு இம்மையின் பமும் வீடுபேருகிய பேரின்பமும் ஒருங் கெய்தும் நிலையில் தாம் வையத்து வாழ்வாங்கு