பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 733

வாழ்ந்த திறத்தினைத் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் 19-ஆம் பாடலில் அடிகள் தெளிவாக விளக்கி யுள்ளார். திருவெண்காடர் மனந்திடுக்குற்ற நிலையில் திடீரெனத் துறவெய்தியவர் அல்லரென்பதும மனை வாழ்க் கையில் வாழும் முறைப்படி வாழ்ந்து முறையாகத் துற வடைந்தவரென் பதும் அவர் பாடிய பிரபந்தங்களை ஊன் றிப் பயில்வார்க்கு இனிது விளங்கும். திருவெண்காடர் முதலிற் கடும்பற்றுள்ளமுடையராய் வாழ்ந்து தையற்ருெழி லாளரும் தமக்கு நண்பராய் நற்பொருளைக்கூறி வந்தவரு மாகிய பாணர் செய்த உபாயத்தால் விரைவில் துறவு பெற்ருரெனப் புலவர் புராணமுடையார் கூறுங் கதை,

அறுசுவையடிசில் வறிதினி தருந்தாது ஆடினர்க்கென்றும் பாடினர்க்கென்றும் வாடினர்க்கென்றும் வரையாதுகொடுத்தும்

இவ்வகையிருந்தோம் : என அடிகள் தம் வாழ்க்கையனுபவத்தைப் பற்றிக் கூறும் வாய் மொழிக்கு முற்றிலும் முரளுதல் காண்க.

இனி, திருவெண்காட்டடிகளுக்குப் பத்திரகிரியார் மாணவர் என வழங்கும் கதைக்குத் தக்க சான்றுகள் கிடைக்கவில்லை.

  • ஒட்டுடன் பற்றின்றி புலகைத் துறந்த செல்வப்

பட்டினத்தார் பத்திரகிரி பண்புரைப்ப தெந்தாளோ " எனத் தாயுமான அடிகள், செல்வர் வாழ்வில் வாழ்ந்து அதன்கண் ஒரு சிறிதும் பற்று வையாது உள்ளத்துற வுடையராய் வாழ்ந்த சான்ருேர்களாகப் பட்டினத்தடிகளை யும் பத்திரகிரியாரையும் ஒருங்கு கூறிப் பாராட்டிப் போற்றி யுள்ளார். தாயுமான அடிகளாற் போற்றப் பெற்ற பத்திர கிரியார் என்பவரைப் பற்றிய தெளிவான வரலாற்றுக் குறிப்புக்கள் கிடைக்கவில்லை. பத்திர கிரியார் பாடியதாக அச்சிடப்பெற்று வழங்கும் மெய்ஞ்ஞானப் புலம்பலின் சொல் நடையினையும் பொருளமைதியினையும் கருத்துரன்றி ஆராயுங்கால் அந்நூலைப் பாடிய பத்திரகிரியார் திருவெண் காட்டடிகள் காலத்திற்குப் பன்னுாருண்டுகள் காலத்தாற் பிற்பட்டவரென்பது நன்கு புலகுைம். பட்டினத்தடிகளை யும் பத்திர கிரியாரையும் தாயுமான அடிகளார் ஒருங்கு கூறிப் போற்றிய குறிப்புக்கொண்டு அவ்விருவரும் ஒரு