பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் o

காயத் துள்ளமு துாற ஆறநீ

கண்டுகொள் ளென்று காட்டிய சேய மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே எனவும்,

வாக்கிறந் தமுத மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன், கொடியே னுான்றழை குரம்பை தோறு நாயுடலகத்தே குரம்பை கொண்டின் றேன் பாய்த்தி நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துனே தொறும் ஏற்றினன், உருகுவ துள்ளங் கொண்டோ ருருச்செய் தாங்கெனக் கள்ளூ ருக்கை யமைத்தனன், ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னேயும் இருப்ப தாக்கினன் .

எனவும் வரும் திருவாசகத் தொடர்களால் அடிகள் தெளி வாகக் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.

இறைவனே குருவாக எழுந்தருளி வந்து ஆட் கொள்ளப் பெற்று அன்புருவமாகிய திருவாதவூரடிகள் ஆசிரியப் பெருமான அகலாது வழிபட்டிருந்த நிலையில் ളങ്ങ,ഇഖ് அடிகளை நோக்கி அன்பனே என்னைப் பாடுக எனப் பணித்தருளத் தித்திக்கும் மணி வார்த்தையாகிய திருவாசகச் செழும்பாடல்களேத் திருவாதவூரடிகள் பாடிப் போற்றினர் என்பது வரலாறு. இச்செய்தி,

நாயேனத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை எனவும்,

இருந்து தி யென் வயிற் கொண்டவன்

(திருக்கோவையார்-300) எனவும் வரும் அடிகளது வாய்மொழியால் நன்கு வலி யுறுதல் காண்க

சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் பெற்ற திருவாதவூரடிகள். தமக்கு எளிவந்து அருள்புரிந்த இறைவனது பேரருளை நினைந்து நெஞ்ச நெக்குருகி இரு கண்களிலும் உவகைக் கண்ணிர் மழையெனச் சொரியர் சிவபோகமாகிய பெருந்தேனை நுகர்ந்து ஏனைச் : தொடர்பினை அறவே துறந்து உலகப்பொழு எவற்றையும் நோக்காது மெய்ப்பொருளையே .ே