பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734

பன்னிரு திருமுறை வரலாறு


காலத்திலிருந்தவர்களென்றும் பட்டினத்தடிகள்பால் உப தேசம் பெற்றுத் துறவு நிலையினை மேற்கொண்டு வாழ்ந்த வர் பத்திரகிரியாரென்றும் எண்ணுதற்கு இடமுண்டு. எனினும், இக் கதையினை வலியுறுத்தற்குரிய சான்றுகள் இல்லாமையிலுைம் பத்திரகிரியார் பாடியதாக வழங்கி வரும் மெய்ஞ்ஞானப் புலம்பலின் சொற்பொருளமைதி யினை நோக்குங்கால் அதனைப் பாடியவர் திருவெண்கர்ட் டடிகள் காலத்தவரல்லரென்பதும் அடிகளுக்கு நெடுங் காலம் பிற்பட்டவரென்பதும் நன்கு துணியப்படுமாத லானும் பதினுெராந் திருமுறையாசிரியர்களு ளொருவ ராகிய திருவெண் காட்டடிகளும் மெய்ஞ்ஞானப் புலம்பல் பாடிய பத்திரகிரியாரும் வேறு வேறு காலத்தில் வாழ்ந்தவ ரெனக் கொள்ளுதலே ஏற்புடையதாமென்க.

இனி, திருவெண்காட்டடிகள் திருவொற்றியூரிற் சிவப்பே றெய்தினர் என வழங்குஞ் செய்தி அடிகளது வரலாற்ருெடு தொடர்புடைய தெனவே தெரிகிறது. இக்காலத்தில் திருவொற்றியூர்க் கடற்கரையில் பட்டினத் தடிகள் சமாதி யென்ற பெயருடன் திகழும் கோயில் பிற் காலத்திற் கட்டப்பட்டதென்றும் அடிகளது உண்மைச் சமாதியைக் கடல் கொண்டதென்றும் கூறுவர் சிலர். திருவொற்றியூரில் இப்பொழுதுள்ள சமாதியின் அமைப்பு முறையினைக் காண்போர் இக்கூற்றினை ஒருவாறு ஒப்புக் கொள்வார்கள், அடிகள் பாடிய பிரபந்தங்கள் ஐந்தினுள் இறுதிக்கண் அமைந்தது திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்பது பதினுெராந் திருமுறைப் பிரபந்தங்களின் வைப்பு முறையினுற் புலனுகின்றது. எனவே அடிகள் திருவொற்றியூரில் தங்கி இறைவனை வழிபட்டிருக்கும் நாட்களில் இப்பிரபந்தத்தைப் பாடிப் போற்றித் திரு வொற்றியூரிலேயே சிவபரம் பொருளோடு இரண்டறக் கலந்தனரெனக் கூறுதல் பெரிதும் பொருத்தமுடையதே யாகும்.

பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டு என வழங்கும் பாடற்ருெகுதியிலுள்ள பாடல்கள் திருவெண் காட்டடிகள் வாக்கல்ல வென்பதும், இத் திருப்பாடல்கள் பட்டினத்தார் என்ற பெயருடன் பிற்காலத்தில் வாழ்ந்த துறவறச் செல்வரொருவராற் பாடப்பெற்றன வென்பதும் முன்னரே விளக்கப்பட்டன. இப்பாடல்களை ஆதரவாகக்