பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738

பன்னிரு திருமுறை வரலாறு


காட்டடிகள் வேண்டிக்கொள்வதாக அமைந்தது கோயில் நான்மணிமாலையிலுள்ள உரையின் வரையும் பொருளின் அளவும் என்னும் முதற் குறிப்புடைய அகவலாகும். இதன் கண், -

" தம்மை மறந்து நின்னை நினைப்பவர்

செம்மை மனத்தினும் தில்லைமன்றினும் நடம் ஆடும் அம்பல வான " என அடிகள் இறைவனைப் போற்றிய இத்தொடர்,

நினைப்பவர் மனங்கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமாம் அம்பலக்கூத்தன் என ஆளுடைய அரசும்,

  • சில்றைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும்

என் சிந்தையுள்ளும் உறைவான் எனத் திருவாதவூரடிகளும் அருளிய பொருளுரைகளை நினைந்து கூறிய குறிப்பினதாதல் காண்க.

தில்லையம்பலவன் ஆடல் புரியுங்கால் அப்பெருமான் நிலத்தே யூன்றிய திருவடி கீழுலகம் ஏழினையுங் கடந்து சென்றது. அவனது திருமுடி எல்லாவுலகங்களையும் கடந்துசென்று அண்டத்திற்கு அப்பால் விளங்கியது. இறைவன் வீசியாடுந் தோள்கள் எட்டுத்திசைகளின் புறத்தன. இவ்வழகிய தோற்றத்தை விளக்குவது,

அடியொன்று பாதல் மேழிற்கும் அப்புறம் பட்டதிப்பால் முடியொன்றிவ் வண்டங்க ளெல்லாங் கடந்தது முற்றும்

வெள்ளைப் பொடியொன்று தோளெட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின் செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்றன் திருநடமே. என்ற பாடலாகும். உலகமே யுருவாகிய இறைவன் ஆடுங்கால் அவனது கூத்தினைப் பொறுத்துக்கொள்ளும் நோன்மை இவ்வுலகத்திற்கில்லை யென்பது இதன்கருத்து. இப்பாடல்,

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மா முகடு பேரும்-கடகம் மறிந்தாடு கைபேரின் வான்திசைகள் ,ே அறிந்தாடும் ஆற்ரு தரங்கு.

என அம்மையார் அருளிய அடியொற்றியமைந்ததாகும்.

ரும்

அற்புதத்திருவந்தாதியை