பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டிகள் 739

இறைவனை நினைந்து வழிபடாது தமது வயிருேம்புதற் பொருட்டுப் பிறவுயிர் கட்குத் தீங்குசெய்து வாழ்வோர் உலகநிலையாமையைச் சிறிதும் உணராதவர் என்பதை விளக்குவது,

நஞ்சுமிழ் வகுவாய் வெஞ்சின மாசுணம் தன்முதல் முருக்க நென் முதற் சூழ்ந்த நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த தேரையை வவ்வியாங்கியாம்முன் கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி மறவா மறலி முறை பிறழ் பேழ்வாய் அயிற்றலை யன்ன எயிற்றிடைக் கிடந்தாங் கருள் நனியின்றி ஒருவயி ருேம்பற்குப் பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி அயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்த்துநின் றெண்டோள் வீசிக் கண்டோர்.உருகத் தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர் ஆடும் அம்பலக் கூத்தனைப் பாடுதல் பரவுதல் பணிதலோ விலமே. என வரும் பாடலாகும். “நஞ்சினைக் கக்கும் பிளந்த வாயினையுடைய பெரும்பாம்பு தன் உடலைக் கவ்வி ஈர்க்க நெற்பயிரின் வேரிற்சுற்றிக்கிடக்கும் சிறிய நீர்ப்பாம்பானது தன் வாய்க்கெதிரே வந்த தவளையைக் கவ்வியது போன்று யாங்கள் கருவினின்றும் வெளிப்பட்டுப்பிறந்த நாள் தொடங்கி வாழ்நாள் கொள்ளுதலை மறவாத கூற்றுவனது வாயினுள்ளே வேல்நுதியையொத்து விளங்கும் பற்களினிடையே அகப்பட்டுக்கிடந்து பிறவுயிர்களிடத்துச் சிறிதும் இர்க்கமின்றி இழிந்த வயிருென்றை வளர்த்தற் பொருட்டுப் பலவுயிர்களின் உடம்பினைக் கொன்று தின்று பின்விளைவறியாது அயர்வுற்றிருந்தோம் போலும் ; பழமை வாய்ந்த மதிலாற்சூழப்பெற்ற தில்லைமுதுாரிலே ஒரு திருவடியையூன்றி மற்ருெரு திருவடியைத் தூக்கி எட்டுத் தோள்களையும் வீசி நின்று காண்போர் மனங் கசிந்துருகத் திருக்கூத்தியற்றும் அம்பலவாணனை வாயாற்பாடுதலும் மனத்தாற்பரவுதலும் மெய்யாற் பணிதலுமாகிய இத் திருப் பணிகளுள் ஒன்றையுஞ் செய்திலோம்" என உலக மக்களின் நிலையா வாழ்வினை யெண்ணி அடிகள் உளமுருகுந் திறத்தை இப்பாடல் புலப்படுத்தல் காண்க,

"மறையவர் போற்றத் தில்லைமன்றில் ஆடல் புரியும் பெருமானே, உலகுகுழைத்துண்ட ஒரு பெருங்கடவுளாகியு